செவ்வாய், 29 நவம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் - பாக்கு

பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்
நீரினும் இனிய ..... .. மதுரைத் தத்தங் கண்ணனார், அகம். 335 :23,24

கமுகின் முற்றாத பசுங்காயின் நீர் இனிமை மிக்குடையது.
                           அங்கருங்காலி சீவி ஊறவைத்து அமைக்கப்பட்ட
                  செங்களி விராய காயும் செம்பழுக் காயும் தீந்தேன்
             எங்கணும் குளிர்ந்த இன்னீர் இளம் பசுங்காயும் மூன்றும்
                 தங்களி செய்யக் கூட்டித் தையலார் கை செய்தாரே
   இச் செய்யுளில் கூறிய பாக்கின் மூன்று நிலையும் மூவேறு பொழுதிற்கு உரியனவாம்  என்பது


                   பைங் கருங்காலிச் செங்கனி அளைஇ
                   நன்பகற்கு அமைந்த அந்துவர்க் காயும்
                   இருங்கண் மாலைக்குப் பெரும் பழுக் காயும்
                   வைகறைக்கு அமையக் கை புனைந்து இயற்றிய
                   இன் தேன் அளைஇய இளம் பசுங்காயும்
என்னும் பெருங்கதைப் பகுதியாற் பெறப்படும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக