திங்கள், 28 நவம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள்

களவில் களித்தலும் உண்டு.

அம்ம வாழி தோழி காதலர்
வெண்மணல் நிவந்த பொலங்கடை நெடுநகர்
நளி இரும் கங்குல் புணர் குறி வாய்த்த
களவும் கைம்மிக வளர்ந்தன்று.......
                          மாமூலனார்,அகம்.325:1-4
உரை: தோழி, நான் கூறுவதனைக் கேட்பாயாக, நம் காதலர் வெள்ளிய மணல் உயர்ந்த,பொலிவு பெற்ற  வாயிலையுடைய பெரிய மனையின்கண் , இருள் செறிந்த நீண்ட இரவில்  புணரும் குறி அமைந்த களவு ஒழுக்கம் வரம்பிகந்து நீண்டது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக