தன்னேரிலாத தமிழ்----146
புல் – மரம்: பொதுப் பெயர்கள்
காயே பழமே தோலே செதிளே
வீழோடு என்றாங்கு அவையும் அன்ன.
-தொல். 1588.
காய். பழம். தோல். செதிள். வீழ் ( விழுது) இவை இரண்டுக்கும்
பொதுவாய் வழங்குவன.
புறக் காழனவே புல் என மொழிப
அகக் காழனவே மரம் என மொழிப.
-தொல். 1585.
தொல்காப்பியர்
மரபியலில் கூறும்
உயிரியல் தொடர்பான
கருத்துக்கள் “ அகக்
காழனவே மரமெனப்
படுமே. புறக் காழனவே புல்லெனப்
படுமே .” போன்றவையும் கபிலர் குறிஞ்சிப்பாட்டில்
99 மலர்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளதும் ஆன்றோர்தம் அறிவியல்
சிந்தனைக்குச் சான்றன்றோ..!
அறிவியல் ஆசான்
தொல்காப்பியர் ஓரறிவு
உயிர்களைப்(புல்.
மரம்.) பகுத்து ஆராய்ந்த முறை
இன்றைய அறிவியலுக்கு
முன்னோடியாக அமைந்துள்ளதை
அறிக…
ஓரறிவு உயிர் பற்றி திருமந்திரத்திலும் படித்த நினைவு ஐயா.
பதிலளிநீக்கு