செவ்வாய், 1 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்----145

 

தன்னேரிலாத தமிழ்----145

பறவைகள் குறித்து ஆராய்ந்த தொல்காப்பியர் தாவரவியல் ஆய்வில்

புல் வகை - மரவகைகளையும் ஆராய்ந்துள்ளார்.

புல்வகை: உறுப்புகள்

தோடே மடலே ஓலை என்றா

ஏடே இதழே பாளை என்றா

ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்

புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்

-தொல்.1586.

                  இலை. பனை மடல். தென்னை ஓலை என வருவன போலசொல் மரபுகள் பல உலக வழக்கில் உள. இவை மற்ற இயலாதன. உள் வயிரம் இல்லாத பனை தென்னை அனைய புல் இன வகைகளின் உறுப்புக்கள் வழங்கப்படும் மரபுமுறை : தோடு. மடல். ஓலை .ஏடு. இதழ் பாளை ஈர்க்கு. குலைஇவ்வாறு வருவன பிறவும் உள. தொல்காப்பியர் பிறவும் உள என்று கூறுவதுஇச்செய்திகளை மேலும் நுண்ணிதின் ஆராயந்து அறிக என்பதற்காம்.

மர வகை: உறுப்புகள்

இலையே முறியே தளிரே கோடே

சினையே குழையே பூவே அரும்பே

நனையுள் ளுறுத்த அனையவை எல்லாம்

மரனொடு வரூஉம் கிளவி என்ப.

-தொல். 1587.

                 மரவகை உள் வயிரம் உடையவை. உள்ளும் புறமும் திண்மையானவை. அவற்றின் உறுப்புக்கள்இலை. முறி. தளிர். கோடு. சினை. குழை. பூ. அரும்பு.  நனை இவை உள்ளிட்ட இவை போன்ற அனைத்தும் . ( கிளவி- சொல் ; முறிமுற்றாத இலை ; நனைமொக்கு ; குழை- கொழுந்து.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக