தன்னேரிலாத தமிழ் - 154
278
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு
மாந்தர் பலர்.
மனம் முழுதும்
மாசாகிய குற்றம்
நிறைந்திருக்க,
ஒழுக்கம் நிறைந்த
உத்தமர்போல் நீராடி மறைந்தொழுகும் மாந்தர் உலகில் பலராவர்.
உத்தமர்போல் உலாவரும் ஒழுக்கக் கேடர்கள் பலர் உளர்.
“வஞ்சித்து
ஒழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோம்
என்று மகிழன்மின் வஞ்சித்த
எங்கும்
உளன் ஒருவன் காணுங்கொல் என்று அஞ்சி
அங்கம்
குலைவது அறிவு.” ====நீதிநெறிவிளக்கம்,
94.
பொய்
வேடம் பூண்டு பிறரை வஞ்சித்து வாழும் மூடர்களே..! அனைவரையும் ஏமாற்றிவிட்டோம் என்று மகிழ்ச்சி கொள்ளாதீர்கள்
; நீங்கள் வஞ்சித்தவற்றை யெல்லாம் எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவன் பார்த்துக்கொண்டுதான்
இருக்கின்றான் என்பதை உணர்ந்து உங்கள் உடல் பதறுவதே உண்மையான இறை அறிவாகும்.
இறை அறிவின் சூட்சுமம் அருமை ஐயா.
பதிலளிநீக்கு