தன்னேரிலாத தமிழ் - 156
452
நிலத்தியல்பால்
நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
நீர் எவ்வகையான
நிலத்தில் வந்து
சேர்கிறதோ அந்நிலத்தின்
தன்மைக்கேற்ப நீர்
திரிந்து வேறுபடும்.
அதுபோல் மக்களும்
தாம் சேர்ந்த
இனத்தின் இயல்புக்கேற்பவே அறிவைப் பெறுவர்.
“ ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க…..” – நன்னெறி, 22.
மக்களுள் உயர்வையும்
தாழ்வையும் அவர் கொண்டிருக்கும் அறிவினால்
மதிப்பிட வேண்டுமே
அல்லாமல் பிறப்பால்
/ சாதியால் அறிய
முற்படுதல் தவறாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக