தன்னேரிலாத தமிழ்- 149
வாய் நன்கு அமையாக் குளனும் வயிறு ஆரத்
தாய் முலை உண்ணாக் குழவியும் சேய் மரபின்
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இம் மூவர்
நல்குரவு சேரப்பட்டார்.
நல்லாதனார், திரிகடு. 84
துறையின்றிக்கிடக்கும் குளம் வழிச்செல்வார் வருத்தம் தீர்க்க உதவாது பயனற்றுப் போகும் ; வயிறு நிறையத் தாய்ப்பால் அருந்தாத குழந்தை வலிவும் பொலிவுமாகிய வளம் இழந்து வறுமையில் வீழும்; இளமையில் கல்விபயிலாத மாந்தரின் வாழ்க்கை வறுமையின் வாய்ப்படும் எனபார் .
உண்மை ஐயா.
பதிலளிநீக்கு