திங்கள், 7 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்- 149

 

தன்னேரிலாத தமிழ்- 149

வாய் நன்கு அமையாக் குளனும் வயிறு ஆரத்

தாய் முலை உண்ணாக் குழவியும் சேய் மரபின்

கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இம் மூவர்

நல்குரவு சேரப்பட்டார்.

நல்லாதனார்,      திரிகடு. 84

                    துறையின்றிக்கிடக்கும் குளம் வழிச்செல்வார் வருத்தம் தீர்க்க உதவாது பயனற்றுப் போகும்  ; வயிறு நிறையத் தாய்ப்பால் அருந்தாத குழந்தை வலிவும் பொலிவுமாகிய வளம் இழந்து வறுமையில் வீழும்; இளமையில் கல்விபயிலாத மாந்தரின் வாழ்க்கை வறுமையின் வாய்ப்படும் எனபார் .

1 கருத்து: