சனி, 3 அக்டோபர், 2020

தன்னேரிலாத தமிழ் - 159

 

 தன்னேரிலாத தமிழ் - 159

534

அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை

பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.


இயல்பாகவே அஞ்சும் மனநிலை கொண்டவர்களுக்கு,  அவர்களைச்சுற்றி எவ்வளவுதான் பாதுகாப்பு இருந்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை. அதுபோலக்  கடமையை மறந்து களிப்பில் கிடப்பவர்களுக்கும் அறிவார்ந்த சுற்றம் இருப்பினும் அதனால் நன்மை ஏதும்  விளைவதில்லை.


கைஞ்ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்

சொல் ஞானம் சோர விடல்.------ நாலடியார், 311.


அற்ப அறிவோடு இருள் நிறைந்த மனத்தினராய் வாழ்பவர் முன்னே, நல்லது சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக