செவ்வாய், 13 அக்டோபர், 2020

தன்னேரிலாத தமிழ் - 163

 

தன்னேரிலாத தமிழ் - 163

559

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.


நீதிநெறிமுறையின்படி ஆட்சி செய்யத் தவறிய மன்னவன் நாட்டில் பருவமழையும் பெய்யாமல்  போகும்.


மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்

இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்

காவலர்ப் பழிக்கும் இக்கண் அகல் ஞாலம்.புறநானூறு.


மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் மக்களின் இயற்கைக்கு முரணான செயற்பாடுகளால் சீரழிவுகள் தோன்றினாலும் இவ்வுலகம் அரசரைப் பழித்துரைக்கும்.

1 கருத்து: