ஞாயிறு, 4 அக்டோபர், 2020

தன்னேரிலாத தமிழ் - 160

 

 தன்னேரிலாத தமிழ் - 160

551

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து.


குடிமக்களின் அமைதி அழித்து அலைக்கழித்து வருத்தும் முறையற்ற செயல்களைச் செய்யும் கொடுங்கோல் மன்னன் கொலை செய்வதையே தொழிலாகக்கொண்ட ஒரு கொலைஞனைவிடக் கொடியவன்.


கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்

படுகதிர் அமையம் பார்த்திருந்தோர் சிலப்பதிகாரம்.


கொடுங்கோல் வேந்தன் ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள் அவன் செத்து ஒழிவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதைப் போல. வெம்மையான கதிரவன் மறையும் பொழுதை அவர்கள் ( கோவலன். கண்ணகி. கவுந்தி அடிகள்) ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.

1 கருத்து: