தன்னேரிலாத தமிழ் - 165
546
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடாது எனின்.
ஓர் அரசனுக்குப் போர்க்களத்தில் வெற்றி தருவது வேல் அன்று ; அவனுடைய வளையாத செங்கோலே. வளையாத செங்கோல் பெறும் சிறப்பு உணர்த்தப்பட்டது.
“ ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்
திங்கள்
அனையை எம்மனோர்க்கே”.
–புறநானூறு, 59.
வேந்தே..
! நின் பகைவர்க்கு
வெப்பம் நீங்காது
தோன்றும்
கதிரவனைப்
போன்றவன் ; எம்போன்று
நின் அருள் பெற்றோர்க்குக்
குளிர் நிலவைப் போன்றவன்
நீயே…!
தொடர்ந்து மன்னனின் பெருமைகளை வாசித்து வருகிறேன். அருமை ஐயா.
பதிலளிநீக்கு