தன்னேரிலாத தமிழ் - 168
409
மேற்பிறந்தா
ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
கல்லாதார் உயர்ந்த
குடியில் பிறந்தவராயினும் அவர்கள், தாழ்ந்த குடியில்
பிறந்து கல்வியறிவில்
மேம்பட்டார் எய்திய
பெருமைகளைப்
பெற முடியாதவர்களே.
( “ உடலோடு ஒழியும் சாதி
உயர்ச்சியினும் உயிரோடு
செல்லும் கல்வி
உயர்ச்சி சிறப்புடைத்து
என்பதாம். இதனான் அவர் சாதி
உயர்ச்சியால் பயனின்மை
கூறப்பட்டது.” ~~~ பரிமேலழகர்.)
“ எக்குடிப் பிறப்பினும்
யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்.” –வெற்றிவேற்கை, 38.
எந்தக் குலத்தில் பிறந்தாலும் யாராக
இருந்தாலும் கல்வியறிவு பெற்றவர்களே எந்த இடத்திலும் மதிக்கப்படும் பேறு பெற்றவர்கள்
ஆவர்.
கல்வியறிவின் சிறப்பு அருமை. இப்போதெல்லாம் பணமிருந்தால்தானே மதிப்பு என நினைக்கின்றார்களே ஐயா.
பதிலளிநீக்கு