செவ்வாய், 3 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 171

 

தன்னேரிலாத தமிழ் - 171

1050

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

வாழ்க்கையில் துய்ப்பதற்கு ஒன்றும் இல்லாத வறியவர்கள் ஆசைகளை முற்றாகத் துறந்து துறவறத்தை மேற்கொள்ளாமைக்குக் காரணம் பிறர் வீட்டு உப்புக்கும் கஞ்சிக்கும் தாங்கள் எமனாக இருக்கவேண்டுமே என்று நினப்பதால்தான்.

அத்து இட்ட கூறை அரைச் சுற்றி வாழினும்

பத்து எட்டு உடைமை பலர் உள்ளும் பாடு எய்தும்

ஒத்த குடிப் பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்

செத்த பிணத்தின் கடை.” ---நாலடியார், 281.

காவி ஆடையை இடுப்பில் அணிந்து பத்தாயினும் எட்டாயினும் பொருள் உடையவராய் இருந்தால், அவர் மக்களிடையே பெருமை பெறுவர். உலகில் உயர்குடியில் பிறந்தவராய் இருந்தாலும் ஒரு பொருளும் இல்லாதார் செத்த பிணத்தைக் காட்டிலும் இழிவாகவே கருதப்படுவர்.

1 கருத்து: