ஞாயிறு, 22 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 175

 

தன்னேரிலாத தமிழ் - 175


மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்கத்

 தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய

நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த” –மதுரைக்காஞ்சி, 10 -12.


மழை வேண்டுங்காலத்துத் தவறாது பெய்து. நாடெங்கும் விளையுள் பெருகி. ஒரு விதைப்பில் விதைத்த விதை ஆயிரமாய்ப் பெருகி விளைய. விளை நிலங்களும் மரங்களும் பல்லுயிரினங்கள் வாழப்  பயன் கொடுக்கும் தொழிலை ஏற்றுத்  தவறாமல் வழங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக