சான்றோர் வாய் (மை)
மொழி : 72. வி.இ.லெனின்.
1 ). மனித சமுதாயத்திற்கு அடிப்படையானதும் பொதுவானதுமான
பொருளைப் புறக்கணித்துவிட்டு வாழ்தலுக்குத் தேவையற்றவைகளின் நுட்பங்களை மிகைப்படுத்திக் கூறுகின்ற போக்கு சமுகநடப்பியல்
இலக்கியங்களில் இடம்பெறுவதில்லை.
2. ) . புகழ்ச்சிச் சொற்களும் உண்மையற்ற போலி அலங்கார வருணனைகளும் இவ்வகை
இலக்கியங்களில் இடம்பெறுவதில்லை.
1.)
நிகழ்கால வரலாற்றைமட்டும்
கூறிவிட்டு அதன் தொடர்ச்சியான வருங்காலத்தைப் பற்றிய உறுதியான சமுதாயப்போக்குகளைக் கூறாமல் விட்டுவிடுவதைச் சமுக
நடப்பியல் இலக்கியங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
4). நிகழ்காலச் சமுதாயம் கடந்தகாலச்சமுதாயத்தின் பிரதிபலிப்பு
என்ற வரலாற்று வளச்சியைப் பார்க்க மறுக்கின்ற
போக்குகளைச் சமுகநடப்பியல் இலக்கியவகை எடுத்துக் காட்டுகிறது.
5). மக்கள்
பெயரால் மக்களுக்காக மக்கள் சார்பில் எடுத்துக் கூறுகின்ற கருத்துக்களுக்கு மதிப்பளிக்க
வேண்டும் என்பது சமுக நடப்பியல் இலக்கியவகையின் தன்மையாகும்.
6).
வாழ்க்கையை உள்ளது உள்ளவாறே அதனுடைய இயக்கத்தில்
வைத்து பழமைக்கும் புதுமைக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை வெளிப்படுத்தி விளக்கிக்
கூறுகின்றபொழுது அனைத்து வேறுபாடுகளையும் அந்தந்த இலக்கியப் பாத்திரப் படைப்பின் வழியே
உணர்த்த வேண்டும். மனித நேயம் என்ற அடிப்படையில் மானுடத்தை உயர்த்திக்காட்டும் வாழ்வின்
சிறப்பிற்கு அழுத்தம் கொடுத்துச் சித்திரத்தல் வேண்டும்.
கார்க்கியின் கருத்து :
……………………… ……………………….தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக