சான்றோர்
வாய் (மை) மொழி : 83. பட்டறிவியச் சிந்தனைகள்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.
தொன்மைத் தமிழின்
மூவாயிரம் ஆண்டு காலவரலாற்றில் தோன்றிய தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கூர்ந்து நோக்கினால்
இயற்கையோடியைந்து வாழ்ந்த தமிழர்தம் பட்டறிவு, பகுத்தறிவு, அறிவியல் சிந்தனைகள்
இன்றளவும் போற்றிப் பேணக்கூடியதாகவே ஒளிர்கின்றன
என்பதை பன்னோக்கு ஆய்வுகள் வழி அறியக் கூடியதாகவே அமைந்துள்ளன.
பட்டறிவு :EMPIRICISM – The theory that regards
Experience(s)
“Nature speaks
the language of God and reveals the majesty of God” –G.Barkely.
“Nothing was
made by God for man to spoil or destroy”- John Loke.
“ சிந்தனை ஒரு வெற்றியக்கம், சிந்தனையால் பொருளறிவைப் பெறமுடியாது,
அனுபவமே மனிதனுக்கு அனைத்தறிவையும் தருகிறதெனக் கூறும் தத்துவம் பட்டறிவியம்;
பகுத்தறிவியத்திற்கு எதிரானது.”
“ஒவ்வொரு மனிதனும் தன் அனுபவத்தைத் தவிர வேறு எதையும் அறிய இயலவே இயலாது, என்று உறுதியாகக் கூறி அறிவின் உறுதித்
தன்மையையும் பொதுமையையும் கேள்விக்குறியாக்கிவிட்டார் , ஹியூம்.
பட்டறிவின்றிப் ”பட்டங்கள் ” (ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு
உதவாது” எனும் பழமொழியை நினைவில் கொள்ளவும் ) ஆளும் நாட்டில் முன்னேற்றம் முயற்கொம்பே..! ஆட்சிக்கு, கல்வியால்
அறிவும் பட்டறிவால் ஆளுமையும் இன்றியமையாதன.
முன்னோர் மொழி பொருளைப்
பின்னோர் பின்பற்றாது ”கண்டதே காட்சி கொண்டதே கோலம் ”என்று திரிந்தால் வாழ்க்கை நரகமாகிவிடும்.
தொல்தமிழர் வாய்மொழி
இலக்கியமாகிய ”முதுசொல்” எனும் பழமொழியில் வாழ்வியல் நெறிமுறைகளை ஓரிரு சொற்களில் புலப்படுத்துவர்.
”பட்டால்தான் புத்திவரும்”
“கெட்டநாய்க்குப் பட்டது உறுதி”
“சொல்
புத்தியும் இல்லை ; சுய புத்தியும் இல்லை “ என்றது நன்மை தீமைகளை அறியும் அறிவின்றி
எல்லாம் எனக்குத் தெரியும் என்று தருக்கித்
திரிபவர் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் அடிபட்டு, அடிபட்டு
உழன்று வருந்துவர். மேற்சுட்டியுள்ள பழமொழிகள் கூறும் அறிவுரைகள் பட்டறிவின் வெளிப்பாடுகளே……!
…………………………தொடரும்………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக