திங்கள், 18 நவம்பர், 2024

 

சான்றோர் வாய் (மை) மொழி : 79.   மெய்யியல் கோட்பாடுகள்.-  மெய்ஞ்ஞானம் (தத்துவம்)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவுகுறள்:423.

மெய்ஞ்ஞானம்:

எல்லாவற்றையும் நடைமுறையில் மெய்ப்பித்துச் சாதிக்க விரும்புகிறோமோ அவற்றைப்பற்றி நாம் பெற்றிருக்கும் ’ஞானம்’ தான் தத்துவம்.

சகல விசயங்களிலும் மிகவும் பொதிந்திருக்கிற பொதுவாயுள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து முடிவு கூறுவது மெய்ஞ்ஞானம் என்று கூறுகிறோம்.

லோகாயதவாத மெய்ஞ்ஞானம்:

மதங்களும் உலகை விளக்க விரும்புகின்றன ஆனால், அவை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக்கொண்டு உலகை விளக்க விரும்புகின்றன. அவை அறிவியலுக்கு விரோதமான விளக்கங்களைத் தருகின்றன.

பிரபஞ்சத்தைப்பற்றி அறிவியல் ரீதியான விளக்கத்தைத் தருவதே லோகாயதவாதம் வேறொன்றுமில்லை.

மெய்ஞ்ஞானம் (தத்துவம் )

“உன்னை அறிந்துகொள்” என்பது சாக்ரடீசின் தத்துவஞானத்தின் முதற் கோட்பாடாகும்.


காரல் மார்க்சு:

                       இளைஞர்களுடைய மனங்களைப் பண்படுத்துகிற மனித குலக் கலாச்சாரம் என்ற மாபெரும் சோதனைச் சாலையில் இரண்டு துறைகள்  முக்கியமான  பங்கு வகிக்கின்றன. அவை கலையும்  தத்துவஞானமும் ஆகும். இவை இல்லாமல் தூலமான  எந்த நடவடிக்கைத்துறையிலும் மெய்யாகப் படைப்பாற்றலைக் கொண்ட எந்தச் சாதனையையும் நீங்கள் செய்ய முடியாது.

                      கலை நம்முடைய உணர்ச்சிகளைப் பண்படுத்தி உலகத்தைப்பற்றி நம்முடைய அழகு நுகர்ச்சியை வளர்க்கிரது என்றால் தத்துவஞானம் அறிவைப் பண்படுத்துகிறது. தத்துவஞானம் நாம் இயக்கவியல் நிலையில் சிந்திக்கக் கற்பிக்கிறது.

                      தத்துவஞானம் மதத்துடன் பொருந்துவதில்லை. நம்பிக்கை மற்றும் குருட்டுத்தனமான வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட தலைமை அதிகார மரபை அது ஏற்றுக்கொள்வதில்லை.

எளிதாக நுழைய முடியாத ஆன்ம உலகங்களில் ஆட்சி செய்கின்ற “விஞ்ஞானிகளின் அரசியான” தத்துவஞானம் பூமிக்கு வரவேண்டிய அவசியத்தைச் சந்திக்கும்.” என்கிறார்.

 …………………………தொடரும்………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக