சான்றோர்
வாய் (மை) மொழி : 81. சிந்தனை:
விளக்கம்.
“எப்பொருள் யார்யார்வாய்க்
கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
–குறள்:423.
சிந்தனை
– (Thought)
கால வளர்ச்சி
– அறிவு வளர்ச்சி – சிந்தனை மாற்றம் – சமுதாய மாற்றம்.
அ.)
புறப் பொருள்களை அறியும் அறிவு – பொருட்காட்சிச் சிந்தனை : (Perceptual Thinking)
1. பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் சிந்தித்தல்
2. கற்பனையாகச் சிந்தித்தல்
3. உளவியல் நினைவும் கற்பனை என்ற கூறும் – நினைவூட்டும் கற்பனை.
ஆ. ) கருத்துக்களை ஆராய்தல் – கருத்துச் சிந்தனை (Conceptual Thinking)
1. சிந்தனை, சொற்கள் – உறவு.
2.சிந்தனை உடல் இயக்க உறவு.
3. அனுமானச் சிந்தனை
4.அறிவியல் கற்பனை …. முதலியன.
சிந்தனை விதிகள்:
1. ஒருமை விதி – (
Law of identy)
2. எந்தப் பொருள் மாறுதல்
பெற்றாலும் அதுஅதுவே. ( அசோகர் போருக்குமுன்,பின் – ஒருவரே.
3. முரணின்மை விதி: (Law
of Contradiction)
ஒரு பொருளுக்கு ஒன்றுக்கொன்று முரணான தன்மைகள் இருக்க முடியாது – ஒருவனுக்கு உயிர்
உண்டு அல்லது இல்லை , இரண்டையும் இணத்துக்கூற முடியாது.
4. நடுப்பொருள் நீக்கும்
விதி (Law of excluded middle)
இரண்டு முரண்பாடுகளுள் ஏதேனும் ஒன்று உண்மையாய் இருப்பது – மாம்பழம்
இனிக்கும் அல்லது புளிக்கும்.
5. போதிய நியாய விதி :
(Law of Sufficient)
அகத்தும் புறத்தும் தோன்றும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் போதிய நியாம்
இருக்க வேண்டும்.
6. ஒன்று போலுள்ள நியாய விதி:
(Law of Uniformity)
ஒரு நிகழ்ச்சிக்குக் கூறும் போதிய நியாயம் அது போன்ற நிகழ்ச்சிக்களுக்கெல்லாம்
போதிய நியாயமாகும்.
இயக்கவியல் தருக்கம்:
இன்று அளவையியலும் அறிவளவையியலும்
அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்பட்டுள்ள சிந்தனை
முறைகளால் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளன.
இதனடிப்படையில்
தருக்கவியலும் வளர்ந்துள்ளது. நமது அறிவுத்தோற்றத்தில் பல படிகள் உள்ளன. முதல் படி,
உலகிற்கும் நமது மூளைக்கும் ஏற்படும் தொடர்பு;
இத்தொடர்பின் வாயில்கள் ஐம்பொறிகள். பொருள் இயக்கத்தின் வெவ்வேறு நிலைகளை வெவ்வேறு
பொறிகள் அறிகின்றன. இவை நரம்புகளின் மூலம்
மூளையின் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்கிறது. இச்சலனங்களையெல்லாம் “கார்டெக்சு”
என்னும் பகுதி தொகுத்தறிகிறது.(Systematise)
…………………………தொடரும்………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக