சனி, 8 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 144. அறிவியல் சிந்தனைகள் - மார்க்சீயம் – மதம் – கடவுள்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 144. அறிவியல்

சிந்தனைகள்  - மார்க்சீயம்மதம்கடவுள்.

மார்க்சீயம் சமுதாயத்தை அளந்துகூறும் அறிவியலாக விளங்குகிறது.மனிதன் தனது உண்மையான நடப்புக்கு இயல்பானவற்றைக் கண்டறிந்தாக வேண்டும்.

 

 சான்றாக.

 மனிதனே மதத்தை உண்டாக்குகின்றான்; மதம் மனிதனை உண்டாக்குவதில்லை. இந்த மார்க்சீய  அறிவைக் கொண்டு  இரசிய மக்கள் ‘ஜாரும் வேண்டாம் ; கடவுளும் வேண்டாம் ; நமக்கு நாமேதன் – எல்லாம் நாமேதான்’ என்று புரட்சியில் ஈடுபட்டனர்.

 சமுதாய அளவில் மனிதர்களுக்காக, மனிதர்களால் நல்வாழ்வை ஏற்படுத்த மார்க்சீயம் விரும்புகிறது.. அறிவைக் கட்டுப்படுத்துவதற்காக, அறியாமையை பலப்படுத்துவதற்காக, சுரண்டலைக் காப்பாற்றுவதற்காக, ஒரு சிலரின் சுகபோகங்களை நியாயப்படுத்துவதற்காகக் கற்பிக்கப்பட்ட – கடவுள், மதம், பாவம் , புண்ணியம், மோட்சம், நரகம், முக்திநிலை, நிர்வாணநிலை ஆகியவை மார்க்சீய திறனாய்வுமூலம் முற்றிலுமாக மறுக்கப்படுகிறது.

 

கடவுள் கொள்கை :  

கெகலைப் பொறுத்த மட்டில் ‘கடவுள் இருப்பதைப் பற்றிய நிரூபணங்கள்’ தொடர்பாக மார்க்சு அவரையும் விமர்சனம் செய்கிறார். இந்த ‘நிரூபணங்கள்’ காண்ட் ஏற்கனவே மறுத்துவிட்டார். ஆனால், கெகல் அவற்றைத் தலைகீழாக நிறுத்திவிட்டார். “அதாவது அவற்றை நியாயப்படுத்துவதற்காக நிராகரித்து விட்டார்.” “ அதரித்து வாதாடுகின்ற வழக்குரைஞர் தம்முடைய கட்சிக்காரர்களைத் தாமே கொலை செய்வதன் மூலமாகவே அவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியுமென்றால் அந்த நபர்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்.”  - மார்க்சு.

“கடவுள் இருப்பதைப் பற்றிய நிரூபணங்கள்’ உண்மையில் தலைமையான மனித உணர்வு இருப்பதைப்பற்றிய நிரூபணங்களே, ஆகவே ‘கடவுள் இல்லை என்பதற்குரிய நிரூபணங்களே’ என்று மார்க்சு எடுத்துக்காட்டுகிறார். இயற்கை நன்கு அமைக்கப்பட்டிருப்பதால் கடவுள் இருக்கிறார் என்று ‘நிரூபணங்களில்’ ஒன்று கூறுகிறது. ஆனால்,  இயற்கை அமைப்பின் ‘பகுத்தறிவுத் தன்மை’ கடவுள் மிகையானவர், கடவுள் தேவையில்லை என்பதை நிரூபிக்கிறது. – மார்க்சு.

…………………….தொடரும் ………………………

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக