சனி, 22 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 156. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 156. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

 ஆர்க்கிமிடீஸ்:

உலகம் முழுவதையும் வென்று அவ்வுலகிற்கு ஏற்ற ஒரு தலைநகரை நைல் நதிக்கரையில் கட்டி அந்நகருக்கு என் பெயரையே இடுவேன், அந்நகரில் உலகில் உள்ள எல்லா விஞ்ஞானிகளையும் ஒன்று சேர்த்து பல்கலக் கழகம் ஒன்றை நிறுவுவேன்என்றான் மாவீரன் அலெக்சாண்டர். ஆனால், உலகை வென்று திரும்பும் வழியில் பாபிலோன் நகரில் மாண்டுபோனான்.

 அலக்சாண்டர்  கூறிய கூற்றை  சிலியோமீனிசுஎன்ற படைத்தலைவன் முயன்று நைல் நதிக்கரையில்அலக்சாண்ட்ரியாநகரை நிறுவினான். அங்கு ஏற்படுத்திய பல்கலைக் கழகத்தில்  உலகில் உள்ள விஞ்ஞானிகளையும் விஞ்ஞான நூல்களையும் தேடிக்குவித்தான். அப்பல்கலைக்  கழகத்தில் ஏறத்தாழ ஐந்து லட்சம் நூல்கள் சேர்க்கப்பட்டன.

சிசிலித்தீவில் அரசாண்ட ஹீரோமன்னர் விஞ்ஞானிகளைப் போற்றி ஆதரித்தார். அந்த அரசவையில்  சிறந்த விஞ்ஞானிகளில்  ஆர்க்கிமிடீஸ்  தலைசிறந்தவர் ஆவார்.

 

போதிய நீளமான நெம்புகோல் ஒன்றை அமைத்துங்கொடுங்கள் இந்த உலகையே  நான் அசைத்துக்காட்டுகிறேன்எனக் காறி நெம்புகோலின் தத்துவத்தை நிலை நிறுத்தினார்  ஆர்க்கிமிடீஸ்.

 

 விண்வெளியில் கோள்கள் யாவும் எவ்வாறு இயங்கி வருகின்றன என்பதை விளக்கிய முதல் விஞ்ஞானி இவரே.! பூமி சுற்றுவதையும் அது நாளொன்றுக்கு ஒரு முறை  தன்னையே சுற்றிக்கொள்வதால் இரவும் பகலும் உண்டாகின்றன என்பதையும் விளக்கிக் காண்பித்த முதல் பெருமையும் இவரையே சாரும்.

 

அறிவியல் வீழ்ச்சி.

 அலெக்சாண்டர் மறைவுக்குப்பின் கிரேக்கப் பேரரசு  உரோமானியர் கைகளில் வீழ்ந்தது. கி.மு. 46இல்  உச்சநிலையில் கொடிகட்டிப் பறந்த உரோமப் பேரரசு அறிவு இருந்த இடத்தில் ஆன்மிகத்தை வைத்து அழகு பார்த்தது. அதன் விளைவு கடவுள் பெயரால்  அறிவியல் கண்டுபிடிப்புகளும் உண்மைகளும்  குழி தோண்டிப் புதைக்கப்பட்டன.

 

போதிய நீளமான நெம்புகோல் அமைத்துக்கொடுங்கள் இந்த உலகத்தை அசைத்துக்காட்டுகிறேன்  என்ற அறிவியல் ஆசான் ஆர்க்கமிடீசை  உரோமப் பேரரசு வாளால் வெட்டிக் கொன்றது.

…………………….தொடரும் …………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக