ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 145. அறிவியல் சிந்தனைகள் - மார்க்சீயம் – மதம் – கடவுள்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 145. அறிவியல்

சிந்தனைகள்  - மார்க்சீயம்மதம்கடவுள்.

 

“கடவுள் இருக்கிறார்” என்பதற்கு மெய்யான நிரூபங்கள் கூறவேண்டும். “ இயற்கை மோசமாக  அமைக்கப்பட்டிருப்பதால் கடவுள் இருக்கிறார் “- உலகத்தில் பகுத்தறிவு இல்லாதபடியால் கடவுள் இருக்கிறார்” – சிந்தனை இல்லாதபடியால் கடவுள் இருக்கிறார்.”

 

”உலகம் பகுத்தறிவுடன் தோன்றவில்லை என்பவருக்கு…. அவருக்குக் கடவுள் இருக்கிறார் அல்லது, பகுத்தறிவு இல்லாததனால் கடவுள் இருக்கிறார்.” மனித சுய உணர்வே  “உயர்ந்த கடவுள் அதைத் தவிர வேறு எதுவும் கிடையாது. - மார்க்சு.

உண்மையைச் சொல்வதென்றால் நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்” என்று புரோமித்தியசு துணிச்சலாகக் கூறியதை “ வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்து கடவுள்களுக்கும் எதிரானதாக மார்க்சு திருப்பினார்.

 

மதம் என்பது தன்னை இன்னும் அறிந்துகொள்ளாத அல்லது மறுபடியும் தன்னை இழந்துவிட்ட மனிதனின் சுய உணர்வு மற்றும் சுய மதிப்பே….. மனிதனுக்கு விரோதமான சக்திகள் மனிதனை ஆள்கின்ற மனித தன்மையற்ற உலகத்தின் உற்பத்தியே அது.” என்கிறார் மார்க்சு.

 

“தலைகீழாக இருக்கும் உலகம் ‘தலை கீழான’ உலகக் கண்ணோட்டத்தை ஏற்படுத்துகிறது. கண்ணீர்க் கடலில் மிதக்கும் பொழுது ‘ தன்னை இன்னும் அறிந்துகொள்ளாத’ மனிதன் மறு உலக வாழ்க்கையைப்பற்றிக்  கற்பனையான கனவுகளில் ஆறுதல் தேடுகிறான். பூமியில் தனக்கு மகிழ்ச்சி இல்லயென்பதால் சொர்க்கத்தில் இருக்கும் இன்பங்களைப் பற்றிய சமய  பிரசங்கங்களில் நம்பிக்கை வைக்கிறான்.”

 

  மனிதன் தன்னுடைய விடுதலைக்காகவும்  இயற்கையை எதிர்த்தும்  நட்த்துகின்ற போராட்டத்தில் பலவீனத்தையும் ஆதரவற்ற  நிலையையும் உணர்கிறான் ; எனவே கடவுளுக்கு வலிமையையும் எல்லாம் வல்ல தன்மையையும் தருகிறான். மனிதன் பூமியில் தன்னுடைய வாழ்க்கயின் அவல நிலைக்குப் பரிகாரத்தைக் கடவுளிடம் தேடுகிறான். அதனால்தான் அக்காலத்தில் மதம் “ இதயமற்ற உலகத்தின் இதயமாகவும் உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சியாகவும் இருப்பதுமட்டுமின்றி இந்த உலகத்துக்கும் அதன் நிலைமைகளுக்கும் எதிர்ப்பாகவும் இருக்கிறது.

 

ஃபாயர்பாக் கூறியதைப்போல மனிதனே மனிதனுக்குக் கடவுள் என்றால் மனிதனை இழிவுபடுத்துகின்ற, அடிமைப்படுத்துகின்ற, கைவிடுகின்ற, புறக்கணிக்கின்ற ‘எல்லா உறவுகளும் தூக்கி எறியப்பட வேண்டும் என்று மார்க்சு தர்க்கரீதியாக முடிவு செய்தார்.

…………………….தொடரும் ………………………

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக