சான்றோர் வாய் (மை) மொழி :
155. அறிவியல்
சிந்தனைகள் - அறிவியல்
புரட்சி . எழுச்சியும்
வீழ்ச்சியும்.
அறிவியல் புரட்சி : வீழ்ச்சி.
மதப் பின்னணியில் ஆட்சி செலுத்திய ஆட்சியாளர்கள் 16 ஆம் நூற்றாண்டில் எல்லா நாடுகளிலும் இருந்தனர்.
கோப்பர் நிக்கசு நூலைப்படித்த
இளைஞர்கள் புதிய உலகைக் காணத்துடித்தனர். ; பழமையைப் புறக்கணிக்க
எழுந்தனர். அவ்வாறு எழுச்சியுற்ற
இளமை உள்ளங்களைத் த்ட்டி எழுப்பினார் ”ஜியார்டனோ புரூனோ” என்ற இத்தாலிய கிறித்துவத்
துறவி.
புரூனோவின் சொற்பொழிவுகளை உரோமாபுரியும் பிரான்சும் இங்கிலாந்தும்
செர்மனியும் கேட்டன.
புரூனோ கோப்பர் நிக்கசு கூறிய
கருத்துகளை மெய்யென்றார். கிரேக்க விஞ்ஞானிகளின் கூற்றுகளை சான்றுகள்
காட்டி நிரூபித்தார். ஜெனிவா நகரில் இவரது சொற்பொழிவைக் கேட்ட மதவாதிகள் இவரை உடனே நாடு கடத்தினர்.
கோப்பர் நிக்கசு எழுதிய நூலின் பெயர் “புரட்சிகள்” என்பதாகும். புரூனோவின் அறிவுப் புரட்சியால்
மேலை நாடுகளில் புதிய
எழுச்சியும் புதிய கருத்துகளும் வேரூன்றத் துவங்கின.
புரூனோ சென்ற நாடுகளெல்லாம் அவரது சொற்பொழிவுக்குத்
தடை விதிக்கலாயின. தனது தாயகமாம் இத்தாலிக்கு அவர் திரும்பியபோது
ஜெனீவா அரசு அவரைக் கைது செய்தது. விசாரணை என்ற பெயரில் அவரை
எட்டு மாதங்கள் இருட்சிறையில் விலங்கு பூட்டிக் கொடுமை செய்தது. இத்தாலிய அரசின் வேண்டுகோளின்படி
இத்தாலிய சிறைக் கூடத்திற்கு அனுப்பி வைத்தது.
இத்தாலிய நீதிமன்றம் புரூனோவின் மீது என்ணற்றக் குற்றச்சாட்டுகளைச்
சாற்றியது. மதப்
பகைவன் எனப் புரூனோவை அதட்டினர், உருட்டினர், அடித்தனர் எல்லாவிதக் கொடுமைகளும் அவருக்கு நேர்ந்தன.
அன்றைய உரோமை நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 17 – 2- 1600 இல். உரோமை
நகரின் பொதுச் சந்தையில் மரம் ஒன்றிலே புரூனோவைப் பிணைத்துக் கட்டி, அவரைச் சுற்றி விறகுகள் அடுக்கப்பட்டுத் தீயிட்டனர்.
…………………………..தொடரும்
…………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக