திங்கள், 10 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 146. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி .

 

சான்றோர் வாய் (மைமொழி : 146. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .

இயக்கவியல் :

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்தியத் தத்துவ ஞானி கபிலர்,   நிரந்தரமானது என்று எதுவும் இல்லை, எந்த ஒரு பொருளும் வெற்றிடத்திலிருந்து தோன்றுவதில்லை, மற்றப் பொருள்களிலிருந்து – அதாவது அழிந்துவிட்ட மற்றப் பொருள்களிலிருந்துதான் தோன்றுகிறது. ஏனெனில் அழிகின்ற பொருள்கள் ஒன்றுமில்லாமல் போவதில்லை. ; புதிய பொருள்கள் தோன்றுவதற்கான ஆதாரப் பொருளாக அவை அமைகின்றன. எனவே, எதிலிருந்து புதிய பொருள்கள் தோன்றுகின்றனவோ அது எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே படைக்கப்பட முடியாத, அழிக்கப்பட முடியாத மூலப்பொருள் இருந்துவருகிறது எனவும் இதிலிருந்துதான் எல்லாப் பொருள்களும் அதாவது ‘பருப்பொருள்’ தோன்றுகிறது என்றும் முடிவு செய்தார்.கபிலர்.

 லெனின்:

 

பருப்பொருள் என்பது மனித எண்ணத்தின் சார்பின்றி நிலவி , அதனால் பிரதிபலிக்கப்படும் புறநிலை எதார்த்தமாகும். நமது புலனுணர்வு உறுப்புகளின் மீது செயல்பட்டுப் புலனுணர்ச்சியை உண்டாக்குவதுதான் பருப்பொருள் என்கிறார்.

1. ) பருப்பொருள் என்பது நமது உணர்வுக்கு வெளியே நமது உணர்வைச் சாராமல் இருப்பது..

2. ) பருப்பொருள் என்பது நம்முள் புலனுணர்வை ஏற்படுத்துவது.

3. )  பருப்பொருள் என்பது நமது புலனுணர்வும்  உணர்வும் பொதுவாகப் பிரதிபலிக்கும் ஒன்றாகும்.

உயிர் என்பது பருப்பொருளின் இயக்க வடிவங்களுள் ஒன்றாகும். ஆனால் இயக்கத்தின் மற்ற வடிவங்களுடன் இதற்குத் தொடர்பு இருந்தபோதிலும்  இந்த வடிவம் வேறு எந்தவிதமான வடிவத்திலிருந்தும் முக்கியமாக மாறுபட்டதாகும்.

பருப்பொருளின் இயக்க வடிவங்கள்:

1.)     பருப்பொருளினுடைய இயக்கத்தின் ‘ பெளதிக வடிவங்கள்’, பரப்பிடம், வேகம், நிறை, ஆற்றல் மின்னேற்றம் வெப்பம், பருமன் போன்ற உண்மைப் பொருள்களின் தனமைகளிலான மாற்றம்.

இரசாயன வடிவங்கள் ;

2.)     ஒருவிதமான பொருள்கள் இன்னொருவிதமான பொருள்களாக மாறுவது, அணுக்களின் இணைப்பும் மறு இணைப்பும்.

3.)     உயிரியல் வடிவங்கள் :

உயிர் வாழ்க்கை, தாவரங்களிலும் விலங்குகளிலும் ஏற்படும் மாற்றங்கள்.

 

4.)     இயக்கத்தின் சமுதாய வடிவங்கள் :

மனித சமுதாயத்திற்கு மட்டுமே உரித்தான  சமுதாயத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள்.

5.)     பருப்பொருளின் இயக்கம் இயக்கத்தின் தனி ஒரு வடிவிற்குள் அடங்கிவிடவில்லை, மாறாக ‘எல்லாவிதமான மாற்றங்களையும் ’ கொண்டதகும்.

6.)     இயக்கம் என்பதோ நிரந்தரமானது, முழுமுதலானது இயக்கம் படைக்கப்பெறாதது. ; அழிக்கப்பட முடியாதது.

இயக்கமாவது பருப்பொருளின் உள்ளிருக்கும் இயல்புதான். அதன் இருத்தலின் பங்குமாகும் என்ற பொருள்முதல் வாதக் கோட்பாட்டை. நவீன இயற்கை விஞ்ஞானம் சரி என்று மெய்ப்பிக்கிறது..

…………………..தொடரும்……………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக