புதன், 20 மே, 2026

தமிழமுது –297 – தொல்தமிழர் இசை மரபு:157.....அருட் பிரகா வள்ளலார்:

  

தமிழமுது –297 தொல்தமிழர் இசை மரபு:157 - நீட்சியும - 

  வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

இசைமரபு - மறுமலர்ச்சி - 17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில்...! அருட் பிரகா வள்ளலார்:--1823 – 1874. 

அருடபிரகாச வள்ளலார் இலக்கியக் கலைஞர் மட்டுமல்லர் ; வாழ்க்கையின் போக்குகளைக் கணித்தறிந்த திறனாய்வாளரும் ஆவார்.  திறனாய்ந்துணர்ந்த நெறியிலே தாமும் வாழ்ந்து பிறர்க்கும் அந்த நெறியை உணர்த்துபவரே உண்மையான கலைஞர் அவார். வள்ளலார் அப்படிப்பட்ட கலைஞர் 

       அவர் படைத்த இலக்கியங்களிலிருந்து அவருடைய கலையாளுமையைக் காண்போம். வள்ளலார் தம் கலை வாழ்வுக்குத் தேர்ந்தெடுத்த ருவி. அந்தத தெய்வ மொழியினிடத்து அளவிறந்த மதிப்புடையவர் வள்ளலார் 

           திருவருட்பாவில் தமிழைப்பற்றி நான்கு வகையில் குறிப்பிட்டுள்ளார். ஒன்று, பொதுவான குறிப்பு ; இரண்டு தாம் போற்றிய பெருமக்களோடு தமிழை இணைத்துப் ேசுவது ; மூன்று, தாம் வணங்கிப் போற்றிய இறைவனோடு இணைத்துப் பேசுவது ; நான்கு, தமக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பினை குறித்து விளக்குவது. பண்ணீர்மை கொண்ட தமிழ்என்பது இசைப்பாங்கினால் தமிழ் சிறந்திருப்பதைக் குறிக்கிறது.  

ஐந்தொழிலால் நான்செயப் பணித்தாய்    

           அருளமுத உணவளித்தாய்    

வெந்தழில் தீரந்து ்கிய நின்   

          மெய்யடியார் அவைநடுவ    

எந்த உனைப பாடி மகிழ்ந்த    

           இன்புறவே வைத்தருளிச்  

செந்தமிழின் வளர்க்கின்றாய்    

              சிற்சபையில் நடிக்கின்றாய்.  

செந்தமிழைக் கையாளும் சிறப்பினால் வள்ளலாருக்குப் பெருமைகளைச் சபாநாயகர் அருளினார் .” --ம.ரா.போ. குருசாமி- கட்டுரைச்சுருக்கம்,) 

ாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே     

               சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே    

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்    

                        அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே.” என்று சாதிமத பேதங்களால் பிளவுபட்டுக்கிடக்கும் மக்களைப் பார்த்துக் கேட்கின்றார், அருட்பிரகாச வள்ளலார். 

 ..............................................தொடரும்......................................... . 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக