திங்கள், 28 செப்டம்பர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -26. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.

      தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -26. 

  முனைவர் இரெ. குமரன்: மனிதன் என்பவன் தெய்வமாகலாம். 

தொல்தமிழர் - வழிபாடு : திருமாவளவன், தெய்வத்தன்மை உடையவன்...!  

                   கடியலூர் உருத்திரங்கண்ணனார் -பட்டினப்பாலை.  

“மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே   

வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் எனத்   

தான் முன்னிய துறை போகலின்.” --- 271 – 273.  

                         திருமாவளவன் , தெய்வத்தன்மை உடையவன் ஆதலின் மலைகளையெல்லாம் அகழ்தலைச் செய்வான் ; கடல்களையெல்லாம் தூர்த்தலைச் செய்வான் ; தேவர் உலகத்தை மண்ணில் விழச்செய்வான் ; காற்றை இயங்காமல் விலக்குவான் ; என்றும் உலகத்தார் பாராட்டும்படி, தான் கருதிய துறைகள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான்.  

                            காடு கொன்று நாடாக்கி,  குளம் தொட்டு வளம் பெருக்கிய ஆற்றல் கொண்டவன். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் எனும் பாடலுக்கு ஏற்றவாறு தோற்றம் கொண்டவன் திருமாவளவன். சோழ நாட்டின் வளம் பெருக்கி மக்களை மகிழ்வாக வாழ வைத்தவன் , உறையூரைத் தலைநகராக உருவாக்கிப் பெரும்புகழ் கொண்டவன். என்று புலவர், திருமாவளவனின் பேராற்றலைப் போற்றிப் புகழ்கின்றார். 

 ..............................................தொடரும்...................................................... 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக