தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -27.
முனைவர் இரெ. குமரன்:
பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் . மலைபடு கடாம்
தொல்தமிழர் - விழா : குரவைக் கூத்தின் ஆரவாரம்:
“ திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என
நறவுநாள் செய்த குறவர்தம் பெண்டிரொடு
மான்தோல் சிறுபறை கறங்கக் கல்லென
வான்தோய் மீமிசை அயரும் குரவை .” 319 – 322.
நாட்காலையில் கள் குடித்த குறவர்கள், தம் மனைவியருடன் கூடி, மான் தோல் போர்த்த சிறுபறையைக் கல் எனும் ஓசை உண்டாகுமாறு அடித்து, வானைத் தீண்டும் உச்சிமலையில் ஆடும் குரவைக் கூத்தின் ஆரவாரமும்....
“ தினை குறு மகளிர் இசைபடு வள்ளையும்
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப்பறையும் குன்றகச் சிலம்பும்
என்று இவ்வனைத்தும் இயந்து ஒருங்கு ஈண்டி
அவலவும் மிசையவும் துவன்றிப் பலவுடன்
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த
மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்ப.” -342 – 348.
தினையௌக் குத்துகின்ற மகளிரின் இசை மிகும் வள்ளைப் பாட்டும் ; சேம்பையும் மஞ்சலையும் விதைத்து அவை வளர்ந்த பின் பன்றிகள் அவற்றின் கிழங்குகளை அகழாமல் பாதுகாப்பவர் பன்றிகளை ஓட்டுவதற்காக அடிக்கும் பறை ஓசையும்..
இவ்வோசைகளால் எண்ணறிய மலைகளில் தோன்றும் பல் வேறு ஓசைகளும் பிற ஓசைகளும் கூடிக் கலந்து பக்க மலைகளில் பட்டு எதிரொலிக்கும். ( மலைக்கு யானையை உவமித்து, அதன்கண் பிறந்த ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்தமையால் இப்பாட்டிற்கு “மலைபடுகடாம்” எனப் பெயர் அமைந்தது. ..........................................................தொடரும்......................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக