.................This Blogger For Sale..kalappal. Blogspot. Com .................
Please visit : Analytical Report-2026 –Goole.
தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -39.
முனைவர் இரெ. குமரன்:
தொல்தமிழர் -வழிபாடு - - நற்றிணை : பாலை .
தெய்வத்தின் சினம் தணிய யாழிசை:
“ தம் அலது இல்லா நம் நயந்து அருளி
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர் த
ெறல் அருங் கடவுள் முன்னர் சீறியாழ்
நரம்பு இசைத்தன்ன இன்குரற் குருகின்
கங்கை வங்கம் போகுவார் கொல்லோ
எவ்வினை செய்வார்கொல் தாமே...நற்.1 - 6.
- புலவர் பெயர் இல்லை, நற். 189.
சுழன்று அடிக்கின்ற சூறைக்காற்றை உடையதுமான சுரத்திடத்தே நம் தலைவர் சென்றார் ; அவரில்லாமல் சிறிதும் வாழ முடியாத நம்மை விரும்பி அருள்வதற்கு அவர் இன்னும் வரவில்லை, அவ்வாறு வரவில்லையானாலும் வேறு எங்கு செல்வார்..? வருத்துகின்ற சினம் கொண்ட தெய்வத்தின் முன்பு அத்தெய்வத்தின் சினம் தணியப் பாணர் சிறிய யாழின் நரம்பை இசைப்பது போல, இனிய குருகுப் பறவைகள் இருக்கின்ற கங்கை ஆற்றின்கண் ஓடுகின்ற மரக்கலத்தில் ஏறி எங்காவது சென்றிருப்பார் எனக் கருதுகின்றாயா..? வேறு ஏதேனும் தொழில் மேற்கொண்டு அகன்றிருப்பார் என நினைக்கின்றாயா..? அவர் ஓரிடத்தும் போகமாட்டார் ; வேறு ஒரு செயலும் செய்ய மாட்டார், அவர் இப்பொழுதே வருவார் , நீ வருந்தாதே,,!
(தலைவன் பொருள் தேடிச் சென்றன் குறித்த காலம் வந்தும் அவன் இன்னும் வரவில்லையே எனத் தலைவி வருத்தமுற்றாள், தோழி அவளுக்கு ஆறுதல் கூறுவதாக அமைந்தது இப்பாடல்,)
(சென்னியர் - பாணர்.) .........மேலும் காண்க - முருக வழிபாடு - நற். 173,) ....................................தொடரும்........................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக