தமிழ் முழக்கம் 6- பேராசிரியர் சி. இலக்குவனார்
“உண்மைக் கூட்டரசு நிலைக்க வேண்டுமானால், எல்லாத் தேசிய மொழிகட்கும் ஆட்சி மன்றத்தில் சமநிலை அளிக்கப்பட வேண்டும்..
பரத கண்டமாம் இப்பெரு நிலப்
பரப்பில் அமைந்துள்ள கூட்டரசின் மொழியாக ஒன்றை மட்டும் ஏற்றுக் கொள்வது, அதுவும் எவ்வகையாலும் வளர்ச்சி பெறாத வளமற்ற இந்தியை மட்டும் ஏற்றுக் கொள்வது
என்பது, இந்தி மொழிச் செல்வாக்குக்கும் ஏனைய தேசிய மொழிகளின்
வீழ்ச்சிக்கும் --- அழிவுக்கும் அடிகோலுவதாகும்
என்பதில் எட்டுணையும் ஐயமின்று.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக