தமிழாய்வுத்
தடங்கள் -41: நலவாழ்வு. மூளை வளர்ச்சியில் பூச்சிகளின் பங்களிப்பு .
ஒரு புதிய ஆய்வின்படி ஆதி மனிதன் உள்ளிட்ட
விலங்கினங்களின் மூளை வளர்ச்சியிலும் உயர் அறிவுத்திறனிலும் எறும்புகள்,
கூடில்லாத நத்தைகள், சிறிய பூச்சி வகைகள் ஆகியன
தூண்டுகோலாக அமைந்துள்ளன.
வாசிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அமண்டா டி.
மெலின் அவர்களின் ஆய்வுரையில் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் மூளையின் பரிணாம வளர்ச்சியிலும் அறிவுத்திறனிலும்
உணவு தலையாய இடத்தைப் பெற்றிருக்கிறது என்கிறார்.
இவ்வறிஞரின் ஆய்வுரையில் வழக்கமான உணவு அரிதாகிப் போன காலத்தில்
பூச்சிகளைத் தோண்டியெடுத்து உண்டதால் மனிதன் உள்ளிட்ட விலங்கினங்களும் அறிவுத்திறனில் மேம்பட்டுப் பூச்சிகளை இரையாக்க மனிதன் பல புதிய கருவிகளை உருவாக்கினான்
என்கிறார் மெலின்.
மத்திய அமெரிக்கா நாடான ’கோசுடா ரிகாவில் ’வாழும்
கம்புசின் குரங்குகளின்( இவ்வகைக் குரங்குகள் காட்டில் உணவு தேடுவதில் மனிதர்களைப் போலவே கை,கால்களைப் பயன்படுத்தும் வல்லமை உடையவை ) வாழ்வியல் நடைமுறைகளை
ஐந்து ஆண்டுகளாக ஆராய்ந்துள்ளனர். இவ்வாய்வு பரிணாம வளர்ச்சிக்
கொள்கை ஒன்றைச் சார்ந்ததாகிறது . இது உணர்வுகளைக்கடத்தும் திறனை
மேபடுத்தலோடு தொடர்புடையதாகிறது அஃதாவது,கைப்பாடுள்ள திறமை மேலும் வளர்ந்து கருவிகளைக் கையாளுவதிலும் புதிய
சிக்கல்களை தீர்ப்பதிலும் உணவுக்காகப் பூச்சிகளையும் நிலத்தில் புதையுண்ட மற்ற உணவுகளையும் சேகரிக்கும்போது
ஏற்படும் சிக்கல்களையும் தீர்க்க உதவுகிறது.
இவ்வாய்வு முதன்முதலாகப் பருவநிலை மாற்றங்களுக்கேற்ப
கம்புசின் குரங்குகள் எவ்வாறு செயல்பட்டு உணவுத்தேவையை நிறைவேற்றிக்கொள்கின்றன
என்பதக் கள ஆய்வின் வழி
விரிவான சான்றுகளுடன் விளக்குகிறது.
இவ்வாய்வைக் கனடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கில்லாரி
சி யங், கிருசுடின என் மாசுடசி,
லிண்டா எம் பெடிகன் ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர். . இதனால் மக்களினம் பருவநிலை மாற்றங்களுக் கேற்பப் பூச்சிகள், புழுக்கள்,நண்டுகள், நத்தைகள் முதலியவற்றைத் தேடி உண்ணும் முறைகள் கம்புசின் குரங்குகள் கற்றுத்தந்த பாடங்களாகும்.
இவ்வாய்வு உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில்,
குறிப்பாக மூளை வளர்ச்சியில் (அறிதிறன் ) சிறப்பிடம் பெறுகிறது.
எட்டுத்தொகை:
“
கோடை நீடலின் வாடுபுலத் துக்கச்
சிறுபுல்லுணவு
நெறிபட மறுகி
நுண்பல்
எறும்பு கொண்டலைச் செறித்த
வித்தா
வல்சி வீங்குசிலை மறவர் மாறோக்கத்து..
(அகநானூறு:
377.)
மறவர்கள், தம் உணவினை விதைத்து விளைத்தலன்றிச் சிற்றெறும்புகள்
அரிதின் முயன்று அளையிற் செறித்து வைத்தவற்றை அகழ்ந்து எடுத்து உண்ணும் இயல்பினராவர்.
“செம்புற்று
ஈயலின் அளை புளித்து…” (புறநானூறு: 126.)
செம்புற்றின்
ஈசலை, இனிய மோரோடு கூட்டிச் சமைத்த புளிங்கறியை உடையது பாரி நாடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக