தமிழாய்வுத் தடங்கள் -40: நலவாழ்வு.
பூண்டு உண்ணலாமா..?
பூண்டு,
உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயப்பதாக அறிவியல்
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வறுத்துப் பயன்படுத்துவது ஒரு சிறந்த சுவையூட்டியாக,
பலவகையான முறையில் சமைத்து உண்பதால் அது கூடுதலான
எரியாற்றல் அளிப்பதில்லை .குறிப்பாக ஒரு கிராம்பில் (நான்கு கலோரி) உள்ளதைவிடக் குறைவாகவே
பூண்டில் உள்ளது. பூண்டு வெறும் சுவையூட்டி மட்டுமன்று அது புற்றுநோயை எதிர்க்கும்
ஆற்றல் கொண்ட மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. மேலும் இதய நோய்களைத் தடுத்து, பாதுகாப்பளிக்கிறது.
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் காரப்பொருள் நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பளிக்கிறது
. பூண்டு, தொற்றுநோய்க் கிருமிகளை ஆற்றலுடன்
எதிர்த்துப் போரிட்டு அழிக்கிறது. பூண்டு, தாழ்நிலை குருதிக் கொதிப்பையும் , பக்கவாத
தாக்குதல் அறிகுறிகளையும் கட்டுப்படுத்துகிறது.
நமது சித்தர் மருத்துவத்தில் பூண்டு மிகச் சிறந்த
இடத்தைப் பெற்றுள்ளது. அன்றாடம் நமது வீட்டு அடுமனையில் அன்னையர் கைகளில் அரிய மருந்தாகப்
பயன்பட்டு வருவதையும் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக