தமிழாய்வுத் தடங்கள் – 34.முன்னோர்
கடல்வழியில் சோழர்களின் வெற்றிப் பயணம்.
சோழர்
கப்பல்கள் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுக்கவும் வணிகத் தொடர்புகளுக்கும் கப்பல்களைக்
கிழக்குக் கடற்கரையில் நிறுத்துவது சாலச் சிறந்தது என்று கருதினர்.
கி.பி.
11ஆம் நூற்றாண்டில் இலங்கை மீது படையெடுத்து
அந்நாட்டை இராசராச சோழன் கைப்பற்றினார். இப்படையெடுப்புத் தொடர்ந்து மேலும் பல நாடுகளைக் கைப்பற்ற வழிவகுத்தது.
இந்தோனீசியா, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளை வென்று வாகைசூடினார்
இராசராசன்.
பிற்காலச்
சோழப் பேரரசர்கள் கடல் கடந்த நாடுகளை வெல்வதற்கு முன்னோர்கள் கண்டறிந்த கடல்வழித் தடங்கள்
பேருதவி புரிந்தன.கி.பி. 850 – 1279 வரை கிழக்குக் கடற்கரை, கப்பல் போக்குவரத்துக்குப்
பொருத்தமான இடமாக அமைந்திருந்தது. தஞ்சாவூரும் கங்கைகொண்டசோழபுரமும் சோழர்களின் தலைநகரமாக
விளங்கியதால் நாகப்பட்டினம் துறைமுகம் நாட்டின் பாதுகாப்பிற்கும் வணிகத்திற்கும் சிறந்த
இடமாகத் தேர்வு செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.
மேற்குறிப்பிட்ட
காலகட்டத்தில்தான் கம்போடியா, இந்தோனீசியா, மியான்மர், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர்,
வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளை வென்றெடுக்க முடிந்தது.
சோழப்
பேரரசின் இராசராசன், இராசேந்திர சோழன், குலோத்துங்கன்
ஆகியோர் கிழக்காசிய நாடுகளை வெல்லத் துணிந்து பயணித்தனர்.
சோழர்கள்
16 நாடுகளைப் போரிட்டு வென்றனர் என்னும் செய்தி தஞ்சாவூர் பெருவுடையார் கோவில்
கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
உலகின்
பல்வேறு நாடுகளுடன் தமிழர்கள் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்னும் அரிய வரலார்றுச் செய்திகளை2000, ஆண்டுகளுக்கு
முற்பட்ட சங்க இலக்கியங்களான பட்டினப்பாலையும் புறநானூறும் எடுத்துரைக்கின்றன.
மேலும்
விவான செய்திகளைக் கட்டுரையில் காண்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக