ஞாயிறு, 5 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் – 35: சமணர்கள் எழுதிய அரிய ஓலைச்சுவடிகள் அழியும் நிலையில்…..!

 

தமிழாய்வுத் தடங்கள் – 35: சமணர்கள் எழுதிய அரிய ஓலைச்சுவடிகள் அழியும் நிலையில்…..!


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆதீஸ்வர் சமணக் கோவிலில் அரிய ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பதற்குப் போதிய வசதியின்றி அவை அழியும் நிலையில் உள்ளன. பழமைவாய்ந்த சமண இலக்கியங்களாகிய ‘ஆதிபுராணா’, ’பதார்த்தசாரம்’ ஆகிய நூல்கள் துணியில் சுற்றப்பட்டுச் சிறிய நூலகத்தின் சிமிண்டு பலகையில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 50 சுவடிகளுள் 35 அழியும் நிலையில் உள்ளன. சுவடிகள் கி.பி. முதல் நூற்றாண்டிற்கும் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவையாகும்.  இவை பழங்கால மூலநூல்களின் படிகளாகும்.இவை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவையாகும். ஆரணி ,  இந்திய சமண அறிஞர்கள் கூடும் இடமாக இருந்தது. பழங்கால நூல்களைப் படியெடுத்தவர்கள் யாரென்று அறிய முடியவில்லை என்கிறார். சமண அறிஞர் கே. அஜிதா தாஸ்.மேலும் சுவடிகள் தற்பொழுது வைக்கப்பட்டிருக்கும் இடம் பாடுகாப்பானதாக இல்லை , அவை ஈரப்பதம் அடைந்து அழிந்துவிடும் எனவே புதிய இடம் ஒன்றினை ஏற்படுத்திப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

 ஆதிபுராணா, ரத்னகரன்தாஸ்ரவகசார், பதார்த்த சாரம், மீர்மந்தரபுரம், சமயசார, தத்வசூர்த்ரா இவை மூல்நூல்களின் படிகளாகும். இவை பிராக்ரித், சமற்கிருதம், தமிழ்  ஆகிய மூன்று மொழிகளில் உள்ளன. இவற்றுள்  சில சுவடிகளை மீட்டெடுக்க இயலாது எஞ்சியவற்றை மீட்டெடுக்கலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த  சுவடி வல்லுநர் கே. கிருட்டினகுமார் மேலும் அவர்,சுவடிகளை உடனடியாக மின்னணுப்பதிப்பாக்கினால்  அவற்றைக்காப்பாற்றலாம் என்றார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக