தமிழாய்வுத் தடங்கள் -42: உண்ணாநோன்பிருங்கள்;
உடல் நலம் பேணுங்கள்.
ஆண்டுக்கு ஒரு முறை எட்டு நாள்கள்
உண்ணா நோன்பிருங்கள். உண்ணா நோன்பிருத்தலை வெறுப்பவர்களுக்கு
ஒரு செய்தி. ஓர் ஆண்டுக்கு எட்டு நாள்கள் பட்டினியாக இருந்தால் நீங்கள் உங்களுடைய நோய் எதிப்பாற்றலை முன்னெப்போதும் இல்லாத
அளவிற்குப் பெறமுடியும்.
உணவின்றி இருப்பதால் உடலில் ஒருவித
தூண்டுதல் ஏற்பட்டுப் பழைய, கெட்டுப்போன அணுக்களைப் புதுப்பித்தல் நிகழ்கிறது.
சிறப்பாக வயது முதிர்வாலும் அல்லது புற்று நோயினாலும் நோய் எதிர்ப்பாற்றல் சிதைந்திருப்பினும் உண்ணா நோன்பு புதுப்பித்து விடுவதாக
ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் பட்டினியாக இருக்கும்போது
இயற்கையாகவே
உடலமைப்பு ஆற்றலைச் சேமிக்க
முயல்கிறது. அப்படி நிகழும் இச்செயற்பாடு ஏராளமான நோய் எதிர்ப்பாற்றல்
அணுக்களை மறுசுழற்சியால் பெறினும் அவை
சிதைந்த அணுக்களுக்குத் தேவையில்லை.என்கிறார் வால்டர் லாங்கோ,
’நீண்ட நாள் வாழ்வு” ஆய்வு வல்லுநர், தென்
கலிபோர்னியா பல்கலைக்கழகம்’
இவ்வாய்வின் ஆய்வாளர்கள், பட்டினியாக ஆறு மாதத்திற் கொருமுறை இரண்டு முதல் நான்கு நாள்கள் பட்டினியாக இருந்தால் உடல், உயிர் ஆக்கம் பெறுவதற்காக
விசையொடு உந்தப்படுகிறது இதனால், உயிராற்றலுக்குத் தேவையான கொழுப்பு, சருக்கரை சத்துக்களைச்
சேகரித்துக்கொள்வதோடு பழைய அணுக்களையும் செயலிழக்கச்
செய்துவிடுகிறது.
உடலானது
மூலஉயிரணுவுக்கு சமிக்ஞை அனுப்பி உடல் இயக்கம்
முழுவதையும் மறுகட்டமைப்புச் செய்யுமாறு சொல்கிறது. ஒருவேளை, உடல் புற்று நோய் மருத்துவமாகிய கீமொதெரபியாலோ
அல்லது வயதானதாலோ மிக மோசமான நிலையில் இருந்தால்
உண்ணாநோன்பின் செயல் சுழற்சி புதிய நோய் எதிர்ப்பாற்றல்
இயக்கத்திறனை உருவாக்கும். என்று லாங்கோ குறிப்பிடுகிறார்.
தமிழாய்வுத்
தடங்கள்,
முற்றிற்று.
நன்றி நண்பர்களே… மீண்டும் ஒரு தொடரில் சந்திப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக