வியாழன், 22 ஜனவரி, 2026

தமிழமுது –187– தொல்தமிழர் இசை மரபு:47 . தொல்காப்பியம் - கலியும் பரிபாட்டும்

 தமிழமுது –187– தொல்தமிழர் இசை மரபு:47   . 

தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர். 

        தொல்காப்பியம் -  கலியும் பரிபாட்டும் 

                                                 கலித்தொகை: 

 ்  கலிப்பா வகைகள்:-  

      “ஒத்தாழிசைைக் கலி கலிவெண் பாட்டே 

         ொச்சகம்  உறழொடு கலிநால் வகைத்தே.” -1387.  

 

பொருளானும்உறுப்பானும் முடிபானும் வேறுபட்டு அமையும் கலிப்பாக்கள் த்தாழிசைக் கலிகலி வெண்பாட்டுகொச்சகக்கலி உறழ்கலி என நான்கு வகைப்படும் 


வற்றுள்  ஒத்தாழிசைக்கலி இருவகைத் தாகும்.” -1388. 

அவற்றுள் ஒத்தாழிசைக்கலி இரண்டு வகைப்படும். 


 “இடைநிலைப் பாட்டு தரவு போக்கு அடை என   

நடை பயின்று ஒழுகும் ஒன்றென மொழிப.”-1389.  


இடைநிலைப் பாட்டு என்ற தாழிசைப் பாடல்களும் தரவுபோக்கு  என்ற சுரிதகமும் அடை என்ற தனிச்சொல்லும் என்னும் உறுப்புகளைக் கொண்டு வரும் ஒத்தாழிசைக் கலி என்பர். இவ்வாறு ஒவ்வொரு கலிப்பாவுக்கும்  அடிவரையறை உள்ளிட்ட விரிவான இலக்க விதிகளை வகுத்துள்ளார், தொல்காப்பியர். 


150  ாடல்களைக் கொண்ட கலித்தொகை ஒத்தாழிசை யாப்பு வகையுள் அமைந்தது.  தொல்காப்பியர்  அகப்பொருள் செய்திகளைப் பாடுதற்குரிய பாக்களாகப் பரிபாடல்கலி இரண்டினையும் குறிப்பிட்டுள்ளார்.

 “கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரியதாகும் என்பார்.  

சங்க அகப்பாடல்களுள்  கைக்கிளைத் திணையில்அமைந்த பாடல்கள் கலித்தொகையில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியத்தில் அகத்திணையியல் முதல் நூற்பா அகத்திணைகள் ஏழு எனச் சுட்டும்.

  இவ்வேழு திணைகளுக்கும் இலக்கியமாகத் திகழ்வது கலித்தொகை ஒன்றேகலித்தொகை ; யாப்பு வகையால் பெயர் கொண்டது , கூற்று வகையால் தனி அமைப்புடையது ; கூற்றில் இருவர் உரையாடும் போக்கினைக்கொண்டது ; பிற முல்லைப்பாடல்களில் காணப்பெறாத ஏறு தழுவுதல் இடம் பெற்றுள்ளது ;  கைக்கிளைபெருந்திணையில் அகப்பாடல்களைக்கொண்டது.. இவை போன்ற பற்பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது கலித்தொகை,” என்கிறார் உரையாசிரியர் அ. ிசுவநாதன். 

               

.........................................தொடரும்........................................ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக