களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -16
“அந்தணீர்க் களந்தை அலைபுணற் களந்தை ”எனத் திருவிசைப்பாவில்
வருவதால், இக்களந்தை நீர்வளம் பொருந்தியது என்று பெறப்படுகின்றது. அதற்கு ஏற்ப இவ்வூர்
முள்ளியாற்றுப் பாய்ச்சல் உடையதால் நீர் வளத்துக்குக் குறைவேயில்லை. ஆதலின் இக்களப்பாள்
என்னும் ஊரே கருவூர்த் தேவரின் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும்.
பெரிய
களந்தை ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் பதினான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.(A.R.E.
1927 Nos.164 – 177)
அவைகளுள் ஒன்று நீங்கலாக (எண்.
169) ஏனையவைகள் அனைத்திலும் இறைவன் திருப்பெயர் ‘ ஆதிபுராணீஸ்வரம் உடைய நாயனார்’ என்றே
குறிக்கப் பெற்றிருக்கிறது. அந்த 169 எண்ணுள்ள கல்வெட்டில் ஆதித்தேச்சுரம் உடையார்
என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டு வேறு எங்கிருந்தோ கொண்டுவந்துவைக்கப்பட்டதாகும்.
கல்வெட்டுத்துறையினரும் இக்கல்லை – ‘Stray Stone – எனக்குறித்துள்ளனர். ஆதலின் இப்பெரிய
களந்தை திருவிசைப்பாப் பெற்றதன்று.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக