களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்--7.
கல்லாடம்.
”படை நான்குடன் பஞ்சவற் றுரந்து
மதுரை
வவ்விய கருநட வேந்தன்
அருகர்ச்
சார்ந்து நின்று அரன்பணி அடைப்ப.” –
நான்கு
வகைப் படைகளுடன் வந்து பஞ்சவராகிய பாண்டியரை அகற்றிவிட்டு, மதுரையைப் பிடித்த கருநாடக வேந்தன் அருக மதத்தைச் சார்ந்திருந்த காரணத்தால்
அரனாகிய சிவன் கோயில் வழிபாட்டை மறுத்துவிட்டனர் என்று , கல்லாடச்
செய்யுள் கூறுகிறது.
மூர்த்தி
நாயனார் புராணம்.
“கானக் கடிசூழ் வடுகக் கருநாடர் காவல்
மானப்படை
மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்
யானை
குதிரைக் கருவிப் படை வீரர் திண்தேர்
சேனைக்
கடலுங்கொடு தென்திசை நோக்கி வந்தாந்-(11)
வந்துள்ள
பெரும் படை மண் புதையப் பரப்பிச்
சந்தப்
பொதியில் தமிழ்நாடுடை மன்னன் வீரம்
சிந்தச்
செருவென்று தன்ஆணை செலுத்துமாற்றால்
பந்தப்
பொழில் சூழ் மதுராபுரி காவல் கொண்டான்.”-(12)
வடுகக்
கருநாடர் நாட்டிலிருந்து நால்வகப் படையுடன் வந்து தமிழ் நிலத்தைக் கைப்பற்றினான், என்று கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்லாடம் விரித்துரைக்கின்றது…
……………………………….
தொடரும் ………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக