களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -17.
களந்தை-
களப்பாள்
இறைவரின்
திருப்பெயர் : ஆதித்தேச்சுவரர்
இறைவியாரின்
திருப்பெயர் : பிரபாநாயகி
வழிபாடாற்றியவர்
: ஆதித்த சோழன், கூற்றுவநாயனார்.
இவ்வூரின்
சிறப்பு : கூற்றுவநாயனாரது அவதார ஸ்தலம் இக்களப்பாள் ஆகும். “கோதை நெடுவேற் களப்பாளனாகிய
கூர்றுவனே” என்பது திருத்தொண்டர் திருவந்தாதி.
கல்வெட்டு
வரலாறு ; இவ்வூர்க் கோயில்களில் 12 கல்வெட்டுக்கள்
இருக்கின்றன. இவைகளுள் அழகியநாதசுவாமி கோயிலின்
இரு கல்வெட்டுக்களின் மூலங்கள், தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி எட்டில் வெளிவந்திருக்கின்றன.
அவைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுகிறேன்…….
ஸ்வஸ்தி
ஸ்ரீ கோமாறுபன்மர் திரிபுவனச் சக்கரவர்த்திகள்
சிறிகுலசே
(க) ர தேவற்கு யாண்டு உயங [வது] உளச-ள் பங்குனி மீ களப்பாள் உடையாற் திருவாதித்தீ
[சு]ர முடையாற்கு வாகூருடையார் பிள்ளை காடு [வெ] ட்டியார் மகனார் சொக்க நாய [னா]ர்
கட்டின சந்தி ஒன்று.
இவற்றால்
களப்பாள் என்பது ஊரின் பெயர் என்பதும் ஆதித்தேச்சரம் என்பது கோயிலின் பெயர் என்பதும்
புலப்படுகின்றன.
மேற்குறித்துள்ள
செய்திகள் ,
நூல் : “ஒன்பதாம் திருமுறையில் உள்ள தலங்களின் வரலாற்றுக்
குறிப்பு”-
நூலாசிரியர்:
கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞர்
வித்துவான்
வை. சுந்தரேச வாண்டையார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக