இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…100.
..
உலகநாதர்
இயற்றிய உலகநீதி
நெஞ்சே…..!
”ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் ஆறுமுகனைப்
பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த
உலகநீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாடோறும்
களிப்பி னோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழுந் தேடிப்
பூலோகம் உள்ளளவும் வாழ்வார்
தாமே.”
நெஞ்சே…!
தமிழே
அன்னையாய் விளங்கப் பற்பல வகையால் சான்றோர் நூல்களைக் கற்று, அவை கூறும் பொருளும் முழுதறிந்து,
அருந்தமிழால் ஆறுமுகனைப் பாட விரும்பி “உலகநீதி’
என்னும் நூலை இயற்றினேன்.
”உலகநாதன்” எனப் பெயர்கொண்ட யான் பாடிய இந்நூலைக்
கற்றவர்களும், களிப்புடன் பிறர் பாடும்பொழுது காது கொடுத்துக் கேட்டவர்களும் நல்லறிவும் நலம்ஓங்கும்
நல் வாழ்வும் பெற்று மகிழ்ச்சியுடன் புகழ் விளங்க நீடூழி வாழ்வார்கள்.
…………………………….முற்றிற்று……………………………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக