தமிழாய்வுத் தடங்கள்
-8- அன்றில்.
அன்றில் பறவை:”
இருவாய்க் குருவி ; இப்பறவை நீண்ட காலம் வாழக்கூடியது. வாழ்நாள் ஐம்பது ஆண்டுகள். இந்தப்பறவை
ஒரு பேரலகின் மற்றொரு பேரலகைத் தலைகீழாகக் கவிழ்த்து ஒட்டினாற்போல் இருப்பதால்தான்
தமிழில் இருவாய்க் குருவி என்னும் விந்தைப் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆண், பெண் சேர்ந்துவாழும்
பெரும்பாலும் அந்த இணை சாகும்வரை பிரிவது கிடையாது. இந்திய சாம்பல் இருவாச்சி (Indian
Grey Hornbill )இஃது ஒரு மரம் வாழ் பறவையாகும்.
சங்கப்புலவர் பார்வையில்:
“நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு
தடவின் ஓங்குசினௌக் கட்சியில்… “ – மதுரை மருதனிள நாகனார், குறுந்தொகை
160.
தோழி,
நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய ஆண் அன்றில் பறவை, இறால்மீனைப் போன்ற வளைந்த அலகினையுடைய
தன் பெண் அன்றிலுடன் தடா மரத்தின் உயர்ந்த கிளையின்கண் உள்ள தன் கூட்டிலிருந்து தம்
காதலரைப் பிரிந்தோர்க்குச் செயலறவு தோன்றும்படி ஒலிக்கும். அன்றில் ஆணும் பெண்ணுமாய்
இணைந்து வாழ்வதால் புணர் அன்றில் எனப்பட்டது.
( மேலும் காண்க: நற்றிணை, 303 , 152,
124; குறிஞ்சிப்பாட்டு, 219-220.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக