தமிழாய்வுத் தடங்கள் -6.ஐந்தறிவில் ஆறறிவு : குரங்கு.
கிளி, யானை, குரங்கு முதலியன ஆறறிவு உடையன என இளம்பூரணர் குறித்துள்ளார்.
ஐந்தறிவில்
ஆறறிவு
: குரங்கு.
“கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை
உய்யாக் காமர் மந்தி
கல்லா
வன்பறழ் கிளை முதற் சேர்த்தி
ஒங்குவரை
அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்.” (குறுந்தொகை:69.)
ஆண் குரங்கு இறந்தது அறிந்து,
கைம்மைத் துன்பத்தைப் போக்கமாட்டாத விருப்பத்தையுடைய பெண் குரங்கானது,
மரமேறுதல் முதலிய தொழிலைக் கல்லாத வலிய குட்டியை, சுற்றத்தாரிடம் ஒப்படைத்து, ஓங்கியமலைப் பக்கத்தில் தாவி
உயிரை மாய்த்துக்கொள்ளும். என்று குரங்கின் ஆறறிவுத் திறனைக்
காட்டியுள்ளார் புலவர்.
“காட்டில் விலங்குகள் நீருண்ணக் கிடக்கும் நீர் நிலை வற்றிப்போக அதில் கிடக்கும் முதலைகள் சேறுடன் கலங்கிய குட்டையில் உழன்று கொண்டிருக்க, மான், குரங்கு முதலிய விலங்குகள் முதலைக்கு அஞ்சி உயிரைப் பணையம் வைத்து நீர் அருந்த முயல…… குரங்கு தன்னையும் தன் இனத்தையும் காப்பாற்றிக்கொண்டு நீர் அருந்துவதற்கு முதலையின் தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைக்க, சேற்று நீர்க் குட்டையின் சற்றுத் தொலைவில் ஊற்று தோண்டி நீர் அருந்திய செயல் குரங்கு ஆறறிவு உடையது என்பதற்குத் தக்க சான்றாகும். (Nat-Geo. Tamil Channel. 27/01/ 17.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக