தமிழாய்வுத் தடங்கள் -9 – இசை மருத்துவம் (Music that heals)
தமிழாய்வுத் தடங்கள்
-9 – இசை மருத்துவம் (Music that heals)
இசை மருத்துவம்: இசை மருத்துவம் இன்று நேற்றல்ல தொல்பழங்காலந்தொட்டே
தமிழர்கள் இசை மருத்துவத்தைக் கையாண்டுள்ளனர். இன்றுங்கூட ஊர்ப்புறங்களில் அம்மை
நோய்க்கு மாரியம்மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடுவதும் வீட்டின் முன் வேப்பிலைசெருகி
வைத்தலும் உண்டு.இன்று அறிவியல் ஆய்வில் இம்மருத்துவத்தின் சிறப்பு
வளர்ந்துவருகிறது. இசை மன நோய் மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்றுவருகிறது. குறிப்பாக
மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மனக்கவலையால் வாடும் முதியவர்கள், பொதுவான மனவளக்கலை
இன்னபிற நோய்களுக்கும் மருந்தாக இசை அமைகிறது.
இசைக்கு மயங்காத உயிர்கள் உண்டோ..?
சங்கப்புலவர் பார்வையில்:
பேராசான் வள்ளுவர் திருக்குறளில் மருந்து என்றொரு
அதிகாரத்தில் ….
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் .” என்கிறார்.
சங்கப்புலவர் “நீரும் சோறும் மருந்தாகும்” என்கிறார் (நற்றிணை.53.)
”போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர், மனையைத்
தூய்மை செய்து ஒப்பனை செய்வதும் இனிய இசை பாடுதலும் நறிய மணப்பொருள்களைப் புகைத்து
எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு.”(ஒளவை சு. துரைசாமி.)
“தீங்கனி இரவமொடு வேன்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇ
………………………………………… (அரிசில் கிழார், புறநானூறு: 281 ,1-6)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக