சான்றோர்
வாய் (மை) மொழி : 105. பகுத்தறிவியல் சிந்தனைகள். பெனிடிக்ட் ஸ்பினோசா-( BENEDICT DE SPINOZA – 1632 – 1677.)
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423
அறிமுகம் :
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.
யூதர், கொள்கைக்கேற்ப வாழ்ந்துகாட்டியவர் ; அஞ்சாமல் கருத்துக்களைப் பரப்பியவர். இவர் பன்மொழிப்புலமை
உடையவர் ; தனித்துவமான சிந்தனையால் தீவிரவாதியானார் ; கடவுளை ஒரு பொருள் எனக் கூறினார்
; சமயக் கொள்கைகள் வெற்றுக்கற்பனை என்றார் ; யூத சமயத்தின் பழைமைகளை மறுத்தார் ; மதத்தை
விட்டு விலகினார் ; தனிமையில் மேலும் சிந்தித்தார்
; வறுமையில் வாடினார். வறுமை செம்மை தந்தது.
இவரெழுதிய அறவியல்
(எத்திகா) என்னும் நூல் , இலக்கியச் சுவை நிரம்பிய தர்க்க நூல் ; இந்நூலைச் சிலர் தீயிட
முனைந்தனர் ; இவரை நாத்திகர் என்று இழிவு படுத்தினர்.
இடைக்காலத்தில் கிறித்துவ
சமயம் செழிப்புற்று விளங்கியது ; பிற சமயங்கள் ஒடுக்கப்பட்டன ; யூதர்கள் துன்புறுத்தப்பட்டனர்
; யூத சமயமும் கிறித்துவ சமயமும் முரண்பட்டன. பொதுவாக யூதர்கள் அறிவாளிகள் ; புதுமையாகச்
சிந்திப்பவர்கள் - சர் ஐசக் நியூட்டன் , காரல்
மார்க்சு, ஐன்ஸ்டின் யூதர்கள்.
செறிபொருள் :
அறவியல் நூலின் முதற் பகுதி செறிபொருள் என்பதாம்.
இது பிறிதொன்றால் படைக்கப்படமல், தன் இருப்புக்குத் தானே காரணமாய் அமைகிறது. இதுவே
கடவுள் , கடவுள் எண்ணிலா இயல்புகள் கொண்டவர். அவற்றை மனிதனால் அறிய முடியாது . கடவுள் ஒரு நோக்கம், ஒரு செயல், கொண்டவர் அல்லர்.
வரம்பில்லா பரப்புடைமையும் சிந்தனையும் கடவுளின் இயல்புகள் , வரம்பிற்குட்பட்ட மனிதனால்
அவரை அறிய முடியாது.
….தொடரும் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக