திங்கள், 23 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 109. அறிவியல் சிந்தனைகள். அறிவியல் அறிமுகம் .தொல்தமிழர்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 109. அறிவியல் சிந்தனைகள். அறிவியல் அறிமுகம் .தொல்தமிழர்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு . குறள். 355.

 

 அறிவியல் அறிமுகம்:

நாம் நமது முன்னோர்களின் அறிவுச் செல்வத்தைச் சூதாடித் தொலைத்துவிட்டோம். அவர்தம் அறிவியல் சிந்தனைகளைக் கண்டுபிடிப்புகளாக்கி உலகுக்கு வழங்கத் தவறிவிட்டோம்.

 

சர் ஐசக் நியூட்டன்  – “ நான் கண்டுபிடித்தவையெல்லாம் எனது முன்னோர்களின் தோள் மீது ஏறி நின்று கண்டவையே…!” என்று கூறினார். அப்படித்தான் நாமும் நமது முன்னோர்களின் தோள் மீது ஏறி நின்று அறிவை விரிவு செய்ய வேண்டும்.

 

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு . குறள். 355.

 

                      எப்பொருள் எவ்வகைமைத்தாயினும் ;எத்தன்மைத்தாயினும் அஃதாவது உயிருள்ளவையாயினும் உயிரற்றவையாயினும் அப்பொருளின் இருப்பையும் இயல்பையும் இயக்கத்தையும்  கண்டறிவதே அறிவு என்கிறார். இஃது அறிவியலின் அரிச்சுவடி என்க.

 

” Whatever be the apparent diversity of things it is wisdom

To analyses  and perceive the basic truth of the matter.” –குறள். 355.

 

The enlightened man who has true understanding, will be able to uncover the differing exteriors and lay bare the one central and immanent substance of all things of this world. Emerson’s concept of the ‘over soul’ based on the Upanishadic belief in cosmic unity conforms to Valluvar’s philosophy. And T.S. Eliot’s line, “ All things affirm thee in living”. Also echoes the same idea.

 

Valluvar does not believe in the mere acceptance of things only on the basis of tradition or sanctity. He wants the core of ultimate truth to be arrived at by going right behind appearances with vigorous use of reason.” ..(Tr.) Dr.S.M.Diaz.

 

“ Science – a branch of knowledge requiring systematic study and method – especially one of those dealing with substances ……..” – animal and vegetable life and natural laws……..

 

 

அறிவியல் இரு வகைப்படும்-:

1. அக அறிவியல்.

2.புற அறிவியல்.

 

அக அறிவியல்:

           மனித சமுதாயத்தின் அகவாழ்க்கைச் சார்பானது

மண்ணில் நல்ல வண்ணம் மக்கள் வாழ்வதற்கான நெறிமுறைகளைக் கூறுவது; இப்படித்தான் வாழவேண்டும் என்பதை வரையறுத்துக்கூறுவது.

பிறப்பால் பேதமுறாது; வளர்ப்பால் வழி தவறாது; இல்லறத்தால் உறவு மாறாது..!

  யாதும் ஊரென யாவரும் உறவென இயற்கையோடியைந்து வாழ வற்புறுத்துவது.

 வளமான வாழ்க்கை நலமுடன் விளங்க ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாக அனைத்து உயிர்களும் இயற்கை அன்னையின் மடியில் இன்புற்று இயைந்திருக்கஇயங்க அறம் பல வகுத்துரைப்பது.

 

 

அக அறிவியலின் அடிப்படை ஒழுக்கமுடைமையே.

 

ஒழுக்கமின்றி மனித சமுதாயம் வாழமுடியாது ; வாழவும் கூடாது இஃது எக்காலத்திற்கும் பொருந்தும் அறிவியலாகும். ஒருவன் ஒருத்தி எனும் கற்பொழுக்க வாழ்க்கைமுறைப் புற அறிவியல் வளர்ச்சியால் புறந்தள்ளமுடியாத அக அறிவியலாம்.

 

                                பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் தனிமனிதத்தன்மை சார்ந்தும் சமுதாயம் சார்ந்தும் வாழ்வியலின் அனைத்து நிலைகளையும் அறிவியல் நோக்கில் ஆராய்ந்து எடுத்துரைப்பதே அக அறிவியலாம்.

 

புற அறிவியல்:

 

           மனித சமுதாயத்தின் புறத்தேவைகளைப் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் இயக்கி வருவது.  புற அறிவியலில் நிலையான கண்டுபிடிப்பு என்று எதுவும் இல்லை ; இன்றைய கண்டுபிடிப்புகள் நாளை வழக்கொழிந்து விடுகின்றன. புற அறிவியலின் அசுரத்தனமான வளர்ச்சி  இயற்கையின் இயல்பை மாற்ற முயல்கிறது. இயற்கை, செயற்கையாகிய  அறிவியலால் சிதைக்கப்படுகிறது. இன்று புற அறிவியல்  அனைத்து உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. வானும் மண்ணும் நிலமும் நீரும் வளியும் வாழ்வும் இன்று மாசடைந்துள்ளன. இயற்கையின் மீது புற அறிவியல் தொடுத்த ஆதிக்கப் போர்,  உயிரினங்களைப் பேரழிவை நோக்கிச் செலுத்துகிறது. உலக உருண்டை உள்ளங்கையில் வந்துள்ளது என்னவோ உண்மைதான். ஆனால் வானூர்தியோ, கைப்பேசியோ இல்லாமல் வாழ்ந்துவிடலாம் ; ஒழுக்கமின்றி வாழ்தலாகாது.

………………………………….தொடரும் …………………

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக