சான்றோர் வாய் (மை) மொழி : 106. பகுத்தறிவியல் சிந்தனைகள்.
பெனிடிக்ட் ஸ்பினோசா-( BENEDICT DE SPINOZA – 1632 – 1677.) பகுதி – 2
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423
இவரின் கடவுட் கொள்கை புரட்சிகரமானது
– மனிதப் பண்புகளைக் கடவுளுக்கேற்றி வழிபாடு செய்வது அறியாமை. கடவுளுக்கும் உலகிற்கும்
“படைப்பு நிலை” என்றொரு தொடர்பு இல்லை. மனிதன் மொழியால்
சிந்தனையால் கடவுளை அடைய முடியாது. கடவுளை எந்த மனிதனும் எந்தச் சமயமும் உடைமையாக்கிக்
கொள்ள முடியாது. இயற்கை, காரணமாகவும் காரியமாகவும் விளங்குகிறது. கடவுள் ‘செறிபொருள்’
இயற்கையை இயக்கியாகவும் இயற்கையில் இயங்கியாகவும்
தோற்றமளிக்கிறது.
’அறிவே துன்பம் துடைக்கும்’
உடலும் உள்ளமும் கடவுளின் வெளிப்படுகள். உடலன்றி உள்ளமும்
; உள்ளமின்றி உடலும் இருப்பு நிலையும் செயல்
நிலையும் பெறமுடியாது. ‘ அறிவே புனிதம்,’ என்ற சாக்ரடீஸ் கொள்கையை ஏற்றுக்கொள்கிறார். மனிதன் தன்னுள் புதைந்து
கிடக்கும் அறிவாற்றலை வெளிக்கொணர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எதையும் எவராலும் எப்போதும்
மாற்ற இயலாது ; நடப்பது நடந்தேதீரும். ஆதம்
ஆப்பிள் தின்றது, அவ்வாறு செய்யவேண்டும் என்பது இயற்கையில் இயங்குகின்ற அளவையியக் கட்டாயம். ; இதில் பாவ, புண்ணியம் இல்லை. எந்தச் செயலுக்கும் யாரும் பொறுப்புக் கிடையாது.
இறுதியாக…. !
இயற்கையின் முழுமையில் ஏற்றத்
தாழ்வு இல்லை. அறிவதே சரியான அறிவு. மனிதன் எல்லோரிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்
என்பது அளவையியக் கட்டாயம். ’அறிவுத்
தெளிவே அறம்’ என்கிறார்.
இவ்விடத்து நமது பேராசான் திருவள்ளுவரை
நினைத்துக் கொள்ளுங்கள்.
“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை. (குறள் : 315.)
….தொடரும் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக