சான்றோர் வாய் (மை) மொழி : 108. பகுத்தறிவியல் சிந்தனைகள். காட்ஃபிரைட் லீப்னிஸின் The Monadology (1714), by Gottfried Wilhelm LEIBNIZ (1646-1716)
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423
மொனாடுகள் புலனறிவு ;
மொனாடுகளுக்குப்
புலனறிவு உணர்வெழிச்சிப் பண்புகள் உண்டு ; உணர்வு இல்லாத மொனாடுகள் இல்லை. பிரபஞ்சத்தின் பிரதிநிதியாக ஒவ்வொரு மொனாடும் அமைகிறது.
மொனாடுகள் ஒன்றிற்கொன்று வேறுபட்டவை ; அளவிறந்தவை எனினும் இவைகள் அணுக்கள் இல்லை. மொனாடுகள்
ஒன்றிற்கொன்று தொடர்பின்றித் தனித்து இயங்குகின்றன. பல் கடிகாரங்கள் ஒரே நேரத்தைக்
காட்டுவதைப் போல மொனாடுகள் அமைந்துள்ளன. மொனாடுகளில் முதன்மையானது கடவுள்.
இவ்வுலகில் வேண்டாத பொருள்களோ, ஆற்றல்களோ இல்லை. எல்லாப் பொருள்களும் அற்றல்களும்
பொதுமையோடு இயைபுடையன என்பதாலேயே இறைவனால் அனுமதிக்கப்பட்டுள்ளன.
கடவுளின் அருள் உலகத்திற்குச் செல்லும் வாய்ப்பு மனிதனுக்கு மட்டுமே. அறிவும்
அறமும் உடைய மனிதனே இறைவன் உலகுக்குச் செல்ல முடியும். மனிதனின் செயல்கள் இறைவனால்
மதிப்பிடப்படுகின்றன., என்கிறார்.
இவரின்
கருத்துப்படி இயற்கையின் ஆற்றலே இறைவன் எனக் கொள்ளலாம்.
….தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக