வெள்ளி, 23 ஜனவரி, 2026

தமிழமுது –188– தொல்தமிழர் இசை மரபு:48 . தொல்காப்பியம் - கலியும் பரிபாட்டும்.

 தமிழமுது –188– தொல்தமிழர் இசை மரபு:48   . 

தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர். 

        தொல்காப்பியம் -  கலியும் பரிபாட்டும். 

                          பரிபாடல்:-  

  பழம் பெருமை மிக்க எட்டுத்தொகை நூல்களுள் ந்தாவதாக அமைந்தது பரிபாடல். “ஓங்கு பரிபாடல்”  என்று புகழப்பட்ட சிறப்புடையது இந்நூல்.எட்டுத்தொகை நூல்களுள்  கலித்தொகையும் பரிபாடலும்  ஏனைய று நூல்களைவிடச் சற்றே கூடுதலாக வடமொழிச் சொற்களையும் புராண இதிகாசக் தைகளையும்  கொண்டுள்ளன. 

 

சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் இஃதொன்றே. பரிபாடல் 25 – 400 அடிகளைக் கொண்டதுஇன்று 22 பாடல்களே கிடைத்துள்ளன. தொல்காப்பிய உரைபுறத்திரட்டு ஆகியவற்றில் மூன்று பாடல்கள் உள்ளன. ஆசிரியர் நல்லந்துவனார் முதலாக 13 புலவர்கள் பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு புலவர் இசையமைத்துள்ளனர்.

  சான்றாக 18 ஆம் பாடலைப் பாடியவர்  குன்றம் பூதனார் - கடவுள் வாழ்த்து ; நல்லச்சுதனார் அமைத்த இசை , பண் காந்தாரம். மேலும் பாலையாழ்காந்தாரம் நோதிறம் என்பன வகுக்கப்பட்ட பண்களாகும். 

”இசைக்கலைப் பற்றியும் இசைக்கருவிகளை இயக்கும் முறை பற்றியும் பண்கள் பற்றியும்திறம் பற்றியும் பல செய்திகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. 19ஆம் பாட்டில் குழல் வாசிக்கும் மரபு பற்றிய செய்தி இடம் பெறுகிறது. “கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும் “41. என்பது கை வைத்து ஊதிக் குழலின் இசை அளப்போரும் என இசைநூல் இலக்கணத்தையொட்டிய விளக்கம் தந்தார்  பரிமேலழகர்பண்டைய நாளில் சுருதி கூட்டுவார் குழலையே அதற்குக் கருவியாகக் கொண்டனர். “குழல் வழி நின்றது யாழே “ என்பார் இளங்கோவடிகள். 

 

21ஆம் பாடலில் “ சீர்தகு கேள்வன் உருட்டும் துடிச்சீரால்” 60.  உருட்டல் என்பது யாழ் நரம்புகட்குரிய கிரியைகள் எட்டனுள் ஒன்றாக அமைவதனையும் அவ்வுருட்டலின் வகைகள் நான்கு என்பதனையும் சிலப்பதிகார உரையிலிருந்து எடுத்துக்காட்டி யாழுக்குச் சொன்னது துடிக்கும் பொருந்தக்கூடும் என்ற கருத்தும் இவ்வுரையில் சொல்லப்பட்டுள்ளது.”   

.................................................................பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி. 

 

       ல் தமிழர் இசைமரபு , தொல்காப்பியம் தொடங்கி, சங்க லக்கியங்களிலும் தொடர்ந்துவருவதை மேலும் எட்டுத்தொகைபத்துப்பாட்டு  நூல்களில் இடம்பெற்றுள்ள  தமிழிசையின் மரபின் தொடர்ச்சிய அறிவோம் 

.........................................தொடரும்........................................ 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக