வெள்ளி, 16 அக்டோபர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -43. சிலம்பு கழிக்கும் விழாச் சிறப்பு:

 .................This  Blogger For Sale..kalappal. Blogspot. Com ................. 

  Please visit  : Analytical Report-2026 –Goole. 

 தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -43. 

  முனைவர் இரெ. குமரன்:  

                 தொல்தமிழர் -  சிலம்பு கழிக்கும் விழாச் சிறப்பு:    

பாலை : 

வேம்பின் ஒண்பழம் முணைஇ இருப்பைத்    

தேம்பால் செற்ற தீம் பழம் நசையிஇ    

வைகுபனி உழந்த வாவல் சினைதொறும்    

நெய்தோய் திரியின் தண்சிதர் உறைப்ப   

நாட்சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு   

பொரு யானைப் புட்தாள் ஏய்ப்ப   

பிசிப்பிடி உதைத்த ஓமைச் செவ்வரை   

வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து   

அதர் உழந்து அசையினகொல்லோ ததர்வாய்ச்  

சிலம்புகழீஇய செல்வம்    

பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே.”  

                                                              -கயமனார், நற். 279. வேம்பின் 

 ஒள்ளிய பழத்தை உண்ணுதலை வெறுத்து இருப்பை மரத்தினது தேன்போலும் பால் வற்றிய இனிய பழத்தை விரும்பி பெய்யும் பனியிலே வருந்திய வெளவால் கிளஒதோறும் செல்லும் ; அவ்வெளவால்களின் மீது நெய் தோய்ந்த திரிச் சுடர் விழுவதைப்போலக் குளிர்ந்த பனித்துளிகள் வீழும் ; அத்தகு பனித்துளீகள் வீழும் விடியற்காலையிலே காட்டில் சென்று வருந்திய வாள் போலும் நிறமுற்ற வரிகளைக்கொண்ட ஆண்புலியோடு போர் செய்த யானையின் (  புண்ணையுடைய காலைப்போல ஓமை மரம் தன் சிவந்த அடிப்பகுதியோடு திகழும் ; அம்மரத்தின் மேற்பட்டையைப் பசிமிக்க பெண்யானை உதைத்துப் பெயர்த்து எடுத்ததால் ஞாயிற்றின் ஒளியால் அம்மரம் சிவந்து விளங்கும் ; இத்தகு அருஞ்சுர நெறியில் என் மகளின் அடிகள் சென்று வருந்துகின்றனவோ ; செல்லும் அச்சுர நெறிக்கண் யான் காணாவாறு சிலம்பு கழிக்கும் விழாச் சிறப்பும் பிறர் காண நிகழுமே..! 

                            (தலைவன் தான் காதலித்த பெண்ணை மனம்கொண்டு அழைத்துச் சென்றான் அவ்விரும் செல்லும் வழியோ பாலை நிலப் பாதையாகும் ; தாய் தன் மகளின் முன்மைத்தன்மையை நினைந்து என் மகளின் அடிகள் பாலை நிலக்கொடுமையை எண்ணி வருந்தியவளாக மகளின் சிலம்பு கழி நோன்பை யான் கண்டு மகிழாது பிறர் கண்டு  மகிழுமாறு சென்றனளே என வருந்தினாள்.)  

(முணைஇ - வெறுத்து ; செற்ற - செறிந்த. வற்றிய ; சிதர் - மழைத்துளி. ; ஏய்ப்ப - போல் விளங்க ; அத்தம் - வழி. சுரம் - கடத்தற்கு அரிய வழி.) 

 ...............................................தொடரும்..........................................  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக