திங்கள், 9 நவம்பர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -61. நீர் விளையாட்டு விழா :

 தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -61. 

  முனைவர் இரெ. குமரன்: 4. பதிற்றுப்பத்து : 

             தொல்தமிழர் - நீர் விளையாட்டு விழா :  

“போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும்   

நீர்த்தரு பூசலின் அம்பு அழிக்குநரும்  

ஒலித்தலை விழவின் மலியும் யாணர்   

நாடுகெழு தண் பணை சீறினை ஆதலின்.” 

                 - பாலைக் கெளதமமனார், மூன்றாம் பத்து: 22: 31.  

                          தோலைப்போர்த்து முழக்கப்பட்ட பறையோசையால் புது வெள்ளத்தின் ஓசைய அடக்குவாரும், நீரில் செய்கின்ற விளையாட்டின் ஆரவாரத்தினால் அம்பினால் செய்யும் பேராரவாரத்தை அழியச் செய்வாரும், முழக்கத்தைத் தன்னிடத்தே பெற்ற நீர் விழாவின்கண் முகுதியாக உள்ள புது வருவாய் உடைய நின்பகைவர் நாட்டில் பொருந்திய மருத நிலத்தினை அழிக்கும் பொருட்டு நீ சினந்து பார்த்தாய் ஆதலின் (அவை பெரும் பாழ்நிலங்களாக மாறும் என்று சேரனின் வெற்றிச்சிறப்பைக் கூறினார்.  

( பூசல் - ஆரவாரம் ; ஒலித்தலை விழவு  - பலவகை ஒலிகளைத் தன்னிடத்தே கொண நீர் விழா.   யாணர் - புது வருவாய்) 

 ......................................தொடரும்...................................... 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக