செவ்வாய், 3 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –444: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –444: குறள் கூறும்பொருள்பெறுக.


506

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்

பற்றுஇலர் நாணார் பழி.


உற்றார், உறவு இல்லாதவரைத் தேர்ந்தெடுத்தலைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில், அவர்கள் மக்களிடத்து அன்புடன் பழகும் பண்பு இல்லாதவராகையால் பழிக்கு அஞ்சமாட்டார்கள்.


அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு.” ---வாக்குண்டாம், 17.


நீர் வற்றிய குளத்தில் இருந்து நீங்கிச் செல்கின்ற பறவைகள் போல , வறுமையுற்ற காலத்தில் நம்மைவிட்டு விலகிச் செல்பவர்கள் உறவினர்கள் அல்லர்; நீரற்ற குளத்தில் உள்ள அல்லி, கொட்டி, நெய்தல் ஆகிய  பயிர்கள் போல, விலகாமல் சேர்ந்திருந்து இன்ப துன்பங்களில் பங்குகொள்பவர்களே உறவினர் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக